பக்கம்:மன ஊஞ்சல்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1þ&#* ஊஞ்சல் 14. அவனைக் காதலிக்காதே! அண்ணாமலைப் பண்டிதரைக் கண்டவுடன் தங்கத்திற்கு உள்ளம் பதறியது. ஏனென்றால், அவர் தன்னைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறார் என்ற எண்ணம்தான். அண்ணாமலைப் பண்டிதர் எப்போதும் தங்கத்திடம் சிடுசிடு வென்று நடந்துகொண்டார். அவளிடம் அன்பாகப் பேசியதே கிடையாது. ஆகவே, அவள் அவருக்குப் பணிவிடை செய்யும் நேரம் போக அவரிடம் அணுகிப் பழகியதோ பேசிக் கொண்டிருந்ததோ கிடையாது. ஆனால், அவர் தன்னைத் பற்றி தன் அந்தரங்கத்தைப் பற்றி நன்றாக அறிந்துவைத் திருக்கிறார் என்பதை அவள் பல சந்தர்ப்பங்களிலே உணர்ந் திருக்கிறாள். - - மற்றவர்களுடைய அந்தரங்க விஷயங்களிலே தலை யிடுவது மனிதத் தன்மையல்ல. அதிலும் அண்ணாமலைப் பண்டிதர் போன்ற ஒரு பெரிய மனிதரிடம் இவ்வளவு அற்பமான குணம் இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்க (IAւգաո 51 ஒரு சிலர் இருக்கிறார்கள்; அவர்களுக்குத் தங்கள் வேலை களைப் பார்க்கவே சரியாக நேரமிருக்காது. ஆனால், மற்றவர்கள் Tಣಿ ೯7 செய்கிறார்கள், எங்கே போகிறார்கள் எவருடன் கூடுகிறார்கள், பேசுகிறார்கள், குலவுகிறார்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/128&oldid=854232" இலிருந்து மீள்விக்கப்பட்டது