பக்கம்:மன ஊஞ்சல்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i28 - மன ஊஞ்சல் சொல்லிவிட நினைத்தாலும் வார்த்தைகள் வெளிப்பட வில்லை, அது அவளைப் பின்னால் ஏற்படக்கூடிய பெரிய சிக்கலிலிருந்து ஓரளவு பாதுகாப்பாகத் தப்புவித்தது என்று தான் சொல்ல வேண்டும். சுந்தரேசன் அவள் தன்னைக் காதலிக்கிறாளா என்று கேட்டபோது, அவள் உணர்ச்சி மிகுதியால், பார்வையிலே ஆர்வம் பொங்கப் பார்த்து அவனை விழியாலேயே விழுங்கக் காத்திருப்பவள்போல் நின்றாளே தவிர ஆம் என்று கூற வில்லை. . அவள் கூறினாலும் கூறாவிட்டாலும் தன்னை மிக மிக உண்மையாக அவள் காதலிக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்ட சுந்தரேசன், 'தங்கம் அண்ணமலைப் பண்டிதர் என்ன சொன்னார்! அவர் சொன்னதை எல்லாம் நீ உண்மை யென்று நம்புகிறாயா?" என்று கேட்டான். அவன் இந்தக் கேள்வியைக் கேட்டவுடனே தங்கத்திற்குச் சற்றுமுன் அண்ணாமலைப் பண்டிதர் கூறிய வுரைகள் இலேசாக ஞாபகத்துக்கு வந்தன. அவர் கூறியபோது என்னவோ அவையெல்லாம்-தன் அத்தான் சுந்தரேசனைப் பற்றி அவர் கூறிய கருத்துக்களெல்லாம் உண்மையாகவே இருக்கும்போல் தான் தோன்றியது. ஆனால், ஆசைக்கு ஆசையாய்க் காதலிக்கும் அந்த அத்தானின் மலர்ந்த முகத்தைக் கண்ட வுடனே அவையாவும், வீண் குற்றச்சாட்டுகளாய். வேண்டு மென்றே கூறப்பட்ட வெற்றுரைகளாய் அவளுக்குத் தோன்ற ஆரம்பித்தன. ஆனால், அவன் தன் கருத்து எதனையும் வெளிப்படக் கூறவில்லை. சுந்தரேசனே, தொடர்ந்து பேச ஆரம்பித்தான். "தங்கம்! அண்ணாமலைப் பண்டிதர் பேச்சு எதையும் நீ தம்பாதே! அவர் ஒரு மதவாதி! பார்ப்பதற்கு அவர் ஒரு சம்சாரியைப் தோன்றுகிறாரே தவிர உன்மையில் அவர் ஒரு துறவி. நான் அவரைப்பற்றிக் கேள்விப்பட்டது உண்மையா யிருந்தால். அவர் வாழத் தெரியாதவர் என்றேசொல்வேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/138&oldid=854243" இலிருந்து மீள்விக்கப்பட்டது