பக்கம்:மன ஊஞ்சல்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 மன் ஊஞ்சல் பிறகு எப்படியிருப்பாள் என்று எண்ணிக் கற்பனை செய்து எழுதியதாக இருக்கலாம் என்று சொல்லிவிடலாம். ஆனால், சுவரில் இருந்த படம் கற்பனை ஓவியமல்ல. அசல் நிழற் படம்? ஆம், போட்டோ படம்தான். மரகத அம்மாள் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அம்மா என்று கூவியதால், அது மரகத அம்மாளைப் பெற்றெடுத்த அம்மாவாக இருக்க வேண்டும் என்பதை இளம் பெண்கன் இருவரும் எண்ணிப் பார்த்துத் தெரிந்து கொண்டார்கள். தன்னைப் பெற்றெடுத்த தாயின் படத்தைக் கண்டவுடன், அவளைப் பற்றிய பழைய நினைவுகளெல்லாம் ஏற்பட்டு மரகதம்மாள் கண்ணிர் விட்டுக்கொண்டிருந்தாள் அந்தப் படம் ஜமீந்தார் மாளிகையிலே இருக்கக் காரணம் என்ன என்று தங்கம் சிந்தித்துக்கொண்டிருந்தாள். முன்னொரு முறைதான் ஜமீந்தார் வீட்டு வேலைக்காரியுடன் சுற்றிப் பாாத்தபோது இந்தப் படத்தைக் கவனித்ததாகத் தங்கத்திற்கு நினைவு இல்லை. அந்தப் படத்தில் இருப்பவள் தன் தாயின் தாய் என்று கண்டு கொண்ட தங்கம், இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று எண்ணினால், ஜமீந்தார் வீட்டுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் ஏதோ உறவு முறை இருக்க வேண்டும் என்று அவள் எண்ணினாள். அதனால்தான் அவர்கள் தன்னிடம் திடீரென்று விசேஷ அன்பு காட்டியிருக்கிறார்கள் என்று அவளுக்குத் தோன்றியது. எல்லாச் செய்திகளையும் உடனடியாகத் தெள்ளத் தெளியத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று அவளுக்கு ஆவலாயிருந்தது. ஆனால் தன் தாய் இருக்கும் துயரமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/206&oldid=854319" இலிருந்து மீள்விக்கப்பட்டது