பக்கம்:மன ஊஞ்சல்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 மன ஊஞ்சல் முகமே அவள் நினைவுக்கு வந்து நின்றது. ஒருபுறம் ராஜு வின் முகம் அதையடுத்தாற்போல் இன்னொரு புறம் நடராச னின் முகம், இரண்டுக்கும் எவ்விதமான வேற்றுமையும் இருப்பதாகத் தெரியவில்லை. அதோ நடராசனின் அருகிலே ராதா வந்து நின்றாள். அதே சமயம் ராஜூவின் அருகிலே மலர்க்கொடி வந்து நிற்கிறாள். ராதாவை நடராசன் தனது இடதுகையில் அனைத்துக் கொள்கிறான். மலர்க்கொடியை ராஜு தன் இடதுகையினால் அனைத்துக்கொள்கிறான். இரண்டு பேருடைய இடது கையும் மணிக் கட்டுவரை தான் இருக்கின்றன. உள்ளங்கையுமில்லை. விரல்களுமில்லை. ஆனால் அந்த இரண்டு முகங்களிலேயும் தான் எத்தனை மலர்ச்சி! அந்த இருவருடைய அணைப்பிலும் தான் அந்த இரு பெண்களும் எத் தனை இன்பம் காணுகிறார்கள். மலர்க் கொடியையும் ராதாவையும் பார்க்கு போது தங்கத்திற்கு அவர்கள்மேல் பொறாமையாக இருந்தது. ஆகா இரண்டு பேரும் தங்கள் இதயத்துக்குகந்த காதலர்களை அடைந்து எத்தனை சுகமாக, எத்தனை ஆனந்தமாக இருக்கிறார்கள். தனக்கு மட்டும்...அன்பு காட்ட யாருமில்லை. தன் காதல் ம்ட்டும் ஏன் இப்படித் தோல்வியாகப் போக வேண்டும். அத்தான் சுந்தரேசன் அழகிலே குறைச்சலா அறிவிலே குறைச்சலா, நாகரிகத்திலே குறைச்சலா? இருந்தாலும் தான் அவர்மீது கொண்ட காதல் ஏன் இப்படித் துன்பக் காதலாக முடியவேண்டும்? தான் தேர்ந்தெடுத்த அந்த அழகு சுந்தரேசர் ஏன் இன்னொருத்தியின் கணவராக இருக்க வேண்டும். அதோடு நில்லாமல் ஏன் அவர் வேறு வேறு பெண்களை நாடியோடுபவராகவும், தல்லவர்கள் வெறுத்துரைக்கும் படி நடக்கும் இயல்பினராகவும் இருக்க வேண்டும். தன் தோழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/286&oldid=854408" இலிருந்து மீள்விக்கப்பட்டது