உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

105


இனி அவர்கள் ஆண்ட நாடு, போர் முதலியவற்றைத் திரட்டி நோக்கலாம்.


அரசன் ஆண்ட நாடு செய்த போர்

அந்துவன் (கொங்குக் கருவூர்) (முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி மதங்கொண்டயானைமீது இவனதுகருவூரில் நுழைதல்)

செல்வக் கடுங்கோ வாழியாதன் (கொங்குக் கருவூர் பூழி நாடு) நேரிமலைப் பகுதி, செருப்பு மலைப் பகுதி, நறவுத் துறை முகத்தைத் சூழ்ந்த நாடு, வில்லோர் (குதிரை மலைப் பகுதி) நாடு வேந்தர் செம்மாப்பைத் தொலைத்தான்.

பெருஞ்சேரல் இரும்பொறை (புகார் நாட்டில் வளர்ந்தான்) பூழி நாடு 1. கழுவுளின் காமூரைத் தீக் கிரையாக்கினான்.
2. அதிய மானோடு நீர்கூரில் போரிட்டுச் சோழரையும் பாண்டியரையும் உடன் வென்றான்.
3. எழினியோடு தகடூரில் போரிட்டு வென்றான்

இளஞ்சேரல் இரும்பொறை கொல்லிமலைப் பகுதி வானியாற்றுப்படுகை, நறவுத் துறைமுகப்பகுதி,கொங்கு நாடு, தொண்டித் துறைமுகப் பகுதி. குட்ட நாட்டுப் பகுதி, பூழிநாட்டுப்பகுதி, காட்டூரைச் சூழ்ந்த பகுதி. 1. விச்சியோடு போர்.
2. பெருஞ்சோழனோடு போர்.
3. இளம்பழையன் மாறனோடு போர்.

முன் கண்ட அட்டவணையில் ஒவ்வோர் அரசரும் ஆண்ட நாட்டுப் பகுதிகளையும் அவர்கள் பிற நாட்டு அரசர்களோடு நடத்திய