உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

127


எனவே, இவனது காலம் செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கும் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் இடைப்பட்டது என்பது தெரிகிறது. வானவன் வரலாற்றில் இவனைப்பற்றி மேலும் காணலாம். கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை 1

இவனது வரலாற்றைப் புறநானூற்றுக் கொளுக் குறிப்பு ஒன்று சுட்டுகிறது.

மனைவி

இவன் ஒருத்தியை மணந்து உவகையுடன் வாழ்ந்தவன் எனத் தெரிகிறது. இறந்தவன் தெய்வப் பெண்களுக்குத் துணையாகச் சென்றான் என்று கூறப்படும்போது தன் துணை (மனைவி), ஆயம் இவற்றை மறந்தான் என்று கூறப்படுவதால் அதை உணரமுடிகிறது. கொடைத்தன்மை

அளந்து கொடுத்து அறியாதவன்; அளக்காமல் அள்ளி அள்ளிக் கொடுத்தவன்.

தோற்றப் பொலிவு

'மணிவரை அன்ன மாயோன்' என்று இவன் கூறப்படுவதால் கறுகறுத்த இவன் பொலிவு வெளிப்படுகிறது.

யானைக்கண் என்பதனோடும் இந்த நிற ஒருமைப்பாடு தொடர்புகொண்டுள்ளதை நாம் உணர முடிகிறது.

கூடலூர்கிழார் வானியலில் வல்லவர். சில கோள்நிலைக் குறிகளால் இந்த அரசன் இன்ன நாளில் இறந்துபடுவான் எனக் கணித்து அறிந்தார். ஆனால், தம் கணிப்புப்படி நடவாதிருக்க வேண்டுமென்று விரும்பி அரசன் நோயற்று இருக்கவேண்டுமென வாழ்த்தினார். வாழ்த்துப் பலிக்கவில்லை; கணிப்புப் பலித்தது. கணித்த நாளில் அவன் இறந்தான். இறந்தது கண்டு புலவர் வருந்திப் பாடினார்.

1. இவனும் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சோலிரும்பொறையும் ஒருவராக இருக்கலாம்.