உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


இளைய வழி

அந்துவன்

பொறையன்

பொறையன்

பெருந்தேவி

செல்வக்கடுங்கோ

=

வேளாவிக் கோமான்

வாழியாதன்

பதுமன் தேவி

(7 ஆம் பத்து)

25 ஆண்டு

தகடூர் எறிந்த

மையூர்கிழான் மகள்

பெருஞ்சேரல்

அந்துவஞ்செள்ளை

இரும்பொறை

(8 ஆம் பத்து)

17 ஆண்டு

இளஞ்சேரல் இரும்பொறை

(9 ஆம் பத்து)

16 ஆண்டுகள்

சேரன் செங்குட்டுவன்

இவன், இமயவரன்பன் நெடுஞ்சேரலாதனின் மகன் என்பதையும் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலின் தம்பி என்பதையும் ஆடு கோட்பாட்டுச் சேரலாதனுக்கும் இளங்கோவடிகளுக்கும் தமயன் என்பதையும் முன்னமே யறிந்தோம். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை இவனுடைய தாயாதி அண்ணன் என்பதையும் அறிந்தோம், நெடுஞ்சேரலாதனின் இரண்டு மனைவியரில் சோழன் மணக்கிள்ளியின் மகளான நற்சோணை இவனுடைய தாய். இளமை யிலேயே இவன் சிறந்த வீரனாக விளங்கினான். இவன் தன் தந்தை, தமயன்மார்களின் ஆட்சிக் காலத்தில், இளவரசனாக இருந்த போதே, அவர்கள் செய்த போர்களில் இவனும் கலந்து கொண்டு பகைவருடன் போர் செய்திருக்கிறான். இவன் அரசாட்சிக்கு வந்தபோதும் பல போர்களைச் செய்து வெற்றி பெற்றான்.