உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழக வரலாறு -சேரர், சோழர், பாண்டியர்

417

என்று கருதலாம். இவனை நேரில் கண்டு வாழ்த்திய புலவர் ஒருவர் செந்தில் கடற்கரையில் உள்ள மணலினும் மேலான பல காலம் இவன் வாழவேண்டுமென்று வாழ்த்துகின்றார்.2 எந்த இடத்திலும் இவன் மதுரையில் இருந்து அரசாண்டான் என்று குறிப்பிடப்பெறவில்லை. பாண்டியப் பேரரசர்களின்கீழ் ஆண்ட அரசன் என்ற நிலையிலேயே இவன் காலம் முடிந்துவிட்டதோ என்று எண்ண வேண்டியுள்ளது. பிறர் நாட்டைக் கைப்பற்றும் போது அவர்களது வயல்களிலுள்ள விளைச் சல்களை வீரர்கள் கவர்ந்து கொண்டாலும் கொள்ளட்டும்; அவர்களது பேரூர்கள் எரியூட்டப்பட்டாலும் படட்டும்; பகைவீரர்களைக் கொன்றாலும் கொல்லட்டும். ஆனால், பகையரசர்களுடைய காவல்மரத்தை மட்டும் வெட்டவேண்டா என்று புலவர் ஒருவர் இவ்வரசனுக்கு அறிவுரை கூறியுள்ளார். இந்த அறிவுரை இவன் போருக்கு எழுந்தபோது, போர் வேண்டா என்று தடுத்துரைத்த அறிவுரையாகலாம். இவன் தாராள மாகக் கொடை வழங்கியதாகத் தெரியவில்லை. பரிசில் வழங்கக் காலம் தாழ்த்தியிருக்கக்கூடும். இவனது போக்கைக் கண்டித்துப் புலவர்கள் இவன் நோயின்றி வாழ்ந்தால் சரி என்று வாழ்த்தியுள்ளார்கள். இவனது மனைவி கடவுள் சான்ற கற்பினை உடையாள்; சிறந்த செம்பொன் அணிகலன்களுடன் விளங்கினாள்; பெண்மைக்குரிய மடமைத் தன்மை கொண்டவள்.5

3

இவனுக்கு ஆண்மக்கள் சிலர் இருந்தனர். அவர்கள் கிண்கிணி அணிந்த காலுடன் விளங்கியதைக் கண்ட புலவர்கள் வாழ்த்தியுள்ளனர். காலைக் கதிரவன் போலவும், வளர்பிறை போலவும் இவன் வாழவேண்டும் என்று வாழ்த்தும் புலவர் ஒருவர் இவன் சினத்தால் எமனையும், வலிமையிற் பலராமனையும் புகழால் திருமாலையும், எண்ணிய செயலை முடித்தலில் முருகனையும் ஒத்தவன் என்று குறிப்பிட்டுள்ளார்.

‘பூந்தார் மாற” என்று இவன் கூறப்படுவதிலிருந்து இவனது மலர் மாலை அணிந்து விளங்கிய கோலத்தையும், 'கடுமான் மாற8 என்று கூறப்படுவதிலிருந்து இவனது குதிரைச் சவாரியையும் 'திண்டேர் அண்ணல்’9 என்று கூறப்படுவதிலிருந்து இவன் தேரில் உலாவச்

2.ஷை 55: 18 - 21 3.புறம். 57:5 - 11 4. 609 57

5.ஷெ 196: 13 - 15

6.60 198: 10, 569 15 7. 60 55: 6 8.00198:2 9.60 198: 6