உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


படுத்திய பகைவர்கள் யார்? போர் எங்கு நடைபெற்றது? என்பனவற்றை அறிய இயலவில்லை. எனினும் இவன் சேரனைத் தாக்க வந்த போது பகைவர்களால் காயப்படுத்தப்பட்டான் எனவும், யானை மதங்கொண்டு சோழனுக்கு அடங்காமல் திடீரென ஓடவே பகைவர் மேலும் இவனைத் தாக்கவில்லை எனவும், சோழனது வீரர் மன்னனைக் காக்க வாளேந்திய கோலத்துடன் யானையைப் பின்தொடர்ந்தார்கள் எனவும். போரின் தொடக்கம் சோழனுக்கும் சேரனின் படைத் தலைவனுக்கும் இடையில் நிகழ்ந்திருக்கலாம் எனவும் நாம் உய்த்துணர்வதற்கான குறிப்புகள் உள்ளன.

முருகனைச் சிறப்பித்துப் பாடல்

அந்துவன் என்பவன் திருப்பரங்குன்றத்திலுள்ள முருகனைச் சிறப்பித்துப் பாடினான் என்று சங்ககாலப் புலவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்[1]. இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் திருப்பரங்குன்றத்திலுள்ள சங்ககாலக் கல்வெட்டு ஒன்று உள்ளது[2]. அஃது அந்துவன் என்பவனது பெயரைக் குறிப்பிடுகிறது. இந்த அந்துவன் நம் சேர அரசன் அந்துவனாக இருக்கலாம். நல்லந்துவனார் என்னும் புலவர் திருப்பரங்குன்றத்து முருகனைச் சிறப்பித்துப் பாடியுள்ள பாடல் பரிபாடலில் இடம் பெற்றுள்ளது[3]. இவர் நெய்தற்கலிப் பாடல்களையும் மற்றும் சில பாடல்களையும் பாடியவர்[4]. நம் சேர அரசன் அந்துவன் இந்த நல்லந்துவனார் என்னும் புலவர் என்று கருதவும் இடம் உண்டு.

(அந்துவஞ்சாத்தன்[5]. அந்துவன் கீரன்[6] ஆகிய பெயர்களுக்கும் இவனுக்கும் உறவுமுறையில் தொடர்பு இருந்திருக்கவும் கூடும். அந்து வஞ்செள்ளை என்னும் பெயரும் இத்தகையதே.)[7]

பண்பு நலம்

அந்துவன் தன் நுண்மையான கேள்வி அறிவால் பகைவர்களையும் தன் நண்பர்களாகப் பிணித்து வைத்திருந்தான்[8].

இவன், புலவர் மோசியாரோடு வேண் மாடத்தில் மகிழ்வாக இருந்தான். இவனது பேரன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்-


  1. அகம். 59 : 10 - 13
  2. இந்நூல், இயல் ஒன்று
  3. பரிபா. 8 : 21 - 28
  4. கலி. 119
  5. புறம் 71 : 13
  6. ஷை 359
  7. பதிற். பதி. 9 : 2
  8. ஷை 7 : 1 - 2