உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

109

அடுத்ததோர் மாந்தோப்பில் தங்கினார். அந்த மாந்தோப்பிற்கு உரியவன் அந்நகரத்துக் கருமானாகிய சுந்தன் என்பவன். பகவன் புத்தர் தன்னுடைய மாந்தோப்பில் எழுந்தருளியிருப்பதைக் கேள்விப்பட்ட சுந்தன், பகவரிடம் வந்து வணங்கி வரவேற்றான். அடுத்த நாள், தன் இல்லத்தில் பிக்ஷு சங்கத்தோடு உணவு கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். பகவர் அதற்கு உடன்பட்டார்.

ס.

அடுத்த நாள் உணவுகொள்ளும் வேளைக்குப் பகவர் தமது பிக்ஷு சங்கத்துடன் சுந்தன் இல்லம் சென்றார். சுந்தன் அவர்களை வரவேற்று, எல்லோருக்கும் இருக்கை அளித்து, உணவு பரிமாறினான். காட்டுப்பன்றி இறைச்சி உடல்நலத்துக்கு உகந்த உணவு என்பது அவன் எண்ணம். ஆகவே புத்தரும் பிக்ஷ சங்கமும் உடல்நலத்தோடு இருக்கவேண்டும் என்னும் நல்லெண்ணத்துடன் இந்த இறைச்சியை யும் சமைத்திருந்தான்.

ס

பகவன் புத்தர் இதனை அறிந்து கொண்டார். அதனை உட் கொண்டால் பிக்ஷுக்களுக்கும் தமக்கும் உடல்நலம் கெடும் என்பதைப் பகவர் அறிவார். ஆனால், சுந்தன் நிறைந்த உள்ளன் போடும் நல்லெண்ணத்தோடும் அளிக்க விரும்பிய உணவை விலக்கினால், அவனுக்கு மனவருத்தம் உண்டாகும் என்பதையும் பகவர் அறிவார். அவர், சுந்தனை அருகில் அழைத்து இவ்வாறு கூறினார்: “சுந்த! இறைச்சியைப் பிக்ஷுக்களுக்குப் பரிமாறாதே. எனக்கு மட்டும் பரிமாறு. மிகுதியை எடுத்துக் கொண்டுபோய்ப் பள்ளந்தோண்டி அதில் கொட்டிப் புதைத்து விடு. பிக்ஷுக் களுக்கு வேறு உணவைப் பரிமாறு என்று அருளிச்செய்தார். சுந்தன் அவர் கட்டளைப்படியே பிக்ஷுக் களுக்கு வேறு உணவைப் பரிமாறினான். இறைச்சியைப் புத்தருக்கு மட்டும் பரிமாறிவிட்டு மிகுந்ததைக் கொண்டுபோய்ப் பூமியில் பள்ளந்தோண்டிப் புதைத்துவிட்டு வந்தான்.

وو

உடல்நலத்துக்கு ஒவ்வாத உணவு என்று அறிந்தும் சுந்தனுடைய அன்பையும் நல்லெண்ணத்தையும் ஏற்றுக்கொள்வதற்காகப் பகவர் அவ்விறைச்சி உணவைத் தாம் மட்டும் உண்டருளினார். பகவன் புத்தர் கடைசியாக அருந்திய உணவு இதுவே.

பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டும் பவர்

என்னும் வாக்குப்படி, தமக்கு ஒவ்வாத உணவு என்று அறிந்தும், அருள் உள்ளத்தோடு உண்டருளினார். அதனால், அவருக்குப்