உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

115

வாணர்களைப் பற்றிய கதைகளும் கிடைத்தன. இந்தக் கதைகளைப் பொதுமக்களுக்குத் தரவேண்டுமென்று கருதினேன். இந்தக் கதைகளை மறைந்து கிடக்கவிடக்கூடாது என்று விரும்பினேன். ஏனென்றால் சில கதைகள் பௌத்தமதக் கதைகள். இந்த இருபதாம் நூற்றாண்டிலும், தங்கள் மத சம்பந்தமானவற்றையல்லாமல், பிற மத சம்பந்தமான கதைகளைப் படிக்கக் கூடாதென்று கருதுகிறவர் நமது நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார்கள். அவர்கள் பௌத்த மதக் கதைகளைப் படிப்பதில்லை சமண சமயக் கதைகளைப் பிற சமயத்தவர் படிப்பது இல்லை. சைவ சமயக் கதைகளை ஏனைய மதத்தவர் படிப்பது கிடையாது. 'இந்து' சமயக் கதைகளைப் பௌத்த சமணர் படிப்பது இல்லை.

இவ்வாறு மதக் காழ்ப்பும் வெறுப்பும் உள்ள நமது நாட்டில், பல மதச்சார்பான இந்தக் கதைகள் மறைந்து கிடக்கக்கூடாது. இந்தப் பல மதக்கதைகளை எல்லோரும் படித்துப் போற்ற வேண்டும் என்னும் எண்ணம் தான் இந்தக் கதைகளைத் தொகுப்பதற்குத் தூண்டிற்று. எங் கெங்கோ வெவ்வேறு இடங்களில் மறைந்து கிடந்த இக்கதைகளைத் தொகுத்தேன். இவை பழங்காலத்துக் கதைகள், இவற்றைப் புதிதாக நான் படைக்கவில்லை. ஆனால், இக்கதைகளுக்குப் புதிய வடிவம் கொடுத்துள்ளேன்.

இந்தக கதைகள் நம்முடைய பாரத நாட்டுக் கலைவாணர்களைப் பற்றிய கதைகள். அயல்தேசத்துக் கலைவாணர் கதைகள் இதில் இடம் பெறவில்லை. பாரத நாட்டில் வழங்கி வருகிற கலைவாணரைப் பற்றிய எல்லாக் கதைகளும் இதில் இடம் பெற்றுள்ளன என்று கூற முடியாது. சில கதைகள் விடுபட்டும் இருக்கக்கூடும். என்னுடைய பார்வைக்கு வந்த கதைகளையே இங்குக் கூறியுள்ளேன். பாரத தேசத்துக் கலைவாணர்களைப் பற்றிய கதைத் தொகுப்பில் இதுவே

முதலாவதாகக் கருதுகிறேன்.

இந்நூலை அச்சிட்டு வெளியிட்ட வேணி நூலகத்தாருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மயிலாப்பூர், சென்னை-4

மயிலை சீனி. வேங்கடசாமி

5.9.75