உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

125

இவ்வாறு கூறிய சக்கரன். மேலும் கூறினார்: “அஞ்சாமல் வீட்டுக்குப் போம். நாளைக்கு அரண்மனைக்குப் போய் யாழ் வாசியும். யாழை வாசிக்கும்போது யாழின் ஒரு நரம்பை அறுத்து வாசியும். அதனால் இசை சிறிதும் கெடாது. உம்முடைய மாணவனும் ஒரு நரம்பை அறுத்து வாசிப்பான். அப்போது அவனுடைய யாழின் இசைத் கெடும். நீ ஏழு நரம்புகளையும் ஒவ்வொன்றாக அறுத்து யாழ் வாசிக்கும் போது, உன்னுடைய மாணவனும் நரம்புகளை அறுத்து வாசிப்பான். அவனுடைய இசை கெடும். உன்னுடைய யாழிசை சற்றும் பண் கெடாது. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். நீ அஞ்சாமல் வீட்டுக்குப் போ. உனக்கு வெற்றி கிடைக்கும்” என்று இந்திரன் கூறினான். குட்டிலப் புலவர் வீட்டுக்குத் திரும்பி வந்தார்.

அடுத்த நாள் அரண்மனையில் யாழ் இசைப் போட்டி தொடங்கிற்று. அந்த அழகான பெரிய மண்டபத்திலே நகரப் பெருமக்கள். வந்து அமர்ந்திருந்தனர். பிரமதத்த அரசன், அமைச்சர் முதலிய ஐம்பெருங் குழுவுடன் வந்து அரியாசனத்தில் அமர்ந்தார். குட்டிலப் புலவர் யாழுடன் மண்டபத்தில் அமர்ந்திருந்தார். முகிலனும் அமர்ந்திருந்தான். இசைப் போட்டி தொடங்கிற்று. முதலில் இரண்டு கலைவாணரும் சேர்ந்து யாழை வாசித்தார்கள். இருவரும் ஒரே பண்ணை இசைத்தார் கள். அந்தப் பண் இசை எல்லோருக்கும் மகிழ்ச்சியை யுண்டாக்கிற்று எல்லோரும் மகிழ்ச்சியடைந்தார்கள். இது சபையோருக்கு வணக்கஞ் செய்ய இசைத்த இன்னிசை.

அடுத்தபடியாக குட்டில இசைவாணர் யாழ் வாசித்தார். அவர் ஒரு நரம்பை அறுத்துவிட்டு வாசித்தார். ஒரு நரம்பு அறுந்தும் இசைப் பண் குறையவில்லை. முகிலன் பிறகு யாழ் வாசித்தான். அவனும் ஒரு நரம்பை அறுத்தவிட்டு வாசித்தான். அப்போது அவனுடைய இசை தட்டுப்பட்டது. குட்டிலர் அடுத்து அடுத்து முறையே இரண்டாவது மூன்றாவது நரம்புகளை அறுத்துவிட்டு இசை வாசித்தார். நரம்பு அறுக்கப்பட்டும் இசை சற்றும் குறையவில்லை. முகிலனும் நரம்புகளை அறுத்து விட்டு வாசித்தான். ஆனால், இசை எழவில்லை. பிறகு குட்டிலர் எல்லா நரம்புகளையும் அறுத்துவிட்டு யாழின் தண்டை மட்டும் இசைத்தார். யாழ் இசை சற்றும் குறையாமல் இனிமையாக ஒலித்தது. முகிலனும் எல்லா நரம்புகளையும் அறுத்துவிட்டு இசை வாசித்தான். இசை எழவில்லை.