உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

மூடிக் கொண்டு அனந்தவீரிய மந்திரத்தை பக்தியோடு ஜெபித்துக் கொண்டிருந்தாள்.

ஜெபித்து முடித்த பிறகு கண்களை திறந்தாள். என்ன ஆ ச்சரியம்! எதிரிலே இளமையும் வனப்பும் உள்ள ஒரு ஆ ண் உருவம் நிற்பதைக் கண்டாள்.

அந்தத் தெய்வத்தின் எழிலில் ஈடுபட்டு அந்த உருவத்தின் அழகைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள். அவள் அந்தத் தேவனை வணங்கினாள். கண் இமைக்காமல் பார்த்தாள். அவளுக்கு ஐயம் உண்டாயிற்று.

கண்ணையும் மனதையும் கவரும் இந்த அழகான உருவம் தேவனா! மனிதனா!! கண்கள் இமைக்கின்றன. கால்கள் தரையில் படிகின்றன. தேவர்கள் கண் இமைக்கமாட்டார்கள் என்றும், அவர்கள் கால் தரையில் படிவதில்லை என்றும் கூறுவார்கள். கண் இமைக்கிற படியாலும் கால்கள் தரையில் படிகிறபடியாலும் இது தெய்வமாக இருக்க முடியாது. இது தேவனா? மனிதனா? இந்த ஐயம் அவளுக்கு உண்டாயிற்று.

அவள் கேட்டாள்: "நீர் தேவனா, மனிதனா, உண்மையைச் சொல்லும்.

'உண்மையைச் சொல்லுகிறேன். உண்மை தவிரப் பொய் பேச மாட்டேன். உண்மையில் நான் தேவன் அல்லன், நான் மனிதன். அரசகுமாரன். வச்சரவதி நாட்டின் இளவரசன். என் பெயர் அனந்த வீரியன்!”

66

“நீர் எப்படி இங்கு வந்தீர்! ஏன் வந்தீர்!”

“என்னை நினைத்து என்னுடைய மந்திரத்தை ஜெபித்த படியால்

வந்தேன்.”

இளவரசனான அனந்த வீரியனுடைய அழகில் அவள் ஈடுபட்டாள். அவனைக் காதலித்தாள். அழகும் வனப்பும் உள்ள ஒரு இளவரசனை அரசகுமாரத்தி ஒருத்தி காதலிப்பது தகாத செயலன்று. அது உலக இயல்பு. அனந்த வீரியனும் அவளைக் காதலித்தான். அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பையும் காதலையும் தெரிவித்துக் கொண்டார்கள்.