உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

66

"எத்தனை காலம் கற்றீர்?"

66

157

எனக்கு நினைவில்லை" என்று கூறி உறக்கங் கொண்ட வனைப் போலத் தூங்கி விழுந்தான். பாவம்! வழி நடந்த களைப்புப் போலும் என்று கருதி “நீர் இங்கே படுத்து உறங்கும்" என்று சொல்லி அவள் மாடிக்குச் சென்றான்.

மாலை நேரங் கழிந்து இரவு வந்தது. சுரமஞ்சரியும் தோழி மாரும் பாற்சோறு அருந்தி அத்தாழம் முடித்துக்கொண்டு மாடிக் கூடத்தில் இருந்து யாழ் வாசித்தும் இசை பாடியும் நேரம் போக்கினார்கள். அந்தச் சமயத்தில் யாரோ பாடுவது அவர்கள் காதில் கேட்டது. அவர்கள் தங்கள் பாட்டை நிறுத்திச் செவியோர்ந்து கேட்டார்கள். ஆம்! இனிய இசைப் பாட்டுதான். இவ்வளவு இனிய தேவகானம் எங்கிருந்து வருகிறது! சீவகன் குரல் இசை போலல்லவா இருக்கிறது! கன்னிமாடத்தில் ஆண் மகன் ஒருவனும் வர முடியாதே. சீவகன் இங்கு எப்படி வந்தான் என்று அதிசயப்பட்டார்கள்.

அவர்கள் மாடியை விட்டுப் படியிறங்கிக் கீழே வந்தார்கள். அவர்களுடன் சுரமஞ்சரியும் வந்தாள். கீழ் நிலையில் படுத்திருந்த கிழவன் இசை பாடிக்கொண்டிருப்பதைக் கண்டு வியப்படைந் தார்கள்.

இந்தக் கிழவனா இவ்வளவு இனிமையாக இசைபாடு கிறான் என்று எண்ணி ஆச்சரியத்தோடு ஓசைப்படாமல் நின்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். மகளிர் வந்து நிற்பதையறிந்த கிழவன் இசைப் பாடுவதை நிறுத்திவிட்டான். “நான் கிழவன் என்னால் என்ன செய்ய முடியும்?” என்று கூறினான். பிறகு, "நீங்கள் வாலிபனைக் கண்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டான்.

66

66

ஆண் மகன் என்னும் பெயரும் ஒழிக" என்றாள் ஒரு தோழி. "ஏன் இப்படிச் சொல்லுகிறீர்கள்? ஆண் மகன் யாரேனும் ண் உங்களுக்குத் தீங்கு செய்தானோ? ஆண்கள் செய்த குற்றம் என்ன?” “எங்கள் தலைவியின் சுண்ணத்தைச் சீவகன் தீது என்று பழித்தான். ஆகையால் இவள் ஆண் மக்களையே வெறுத்து விட்டாள்” என்று விளக்கங் கூறினாள் ஒருத்தி.

66

66

கிழவன்.

அந்தச் சீவகன் ஒழிக. அவன் சாகட்டும்” என்று சபித்தான்