உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

163

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள் மணஞ்செய்து கொள்வதற்காக, இசை பாடவும் யாழ் பயிலவும் தொடங்கி விட்டார்கள். காந்தரு வதத்தையை இசைப்போட்டியில் வென்று அவளைத் திருமணஞ் செய்து கொள்ள வேண்டுமென்று அவர்கள் ஒவ்வொருவரும் விரும்பினார்கள்.

கிறீதத்தச் சீமான் நாட்டையாளும் அரசனிடஞ்சென்று நவரத்தினங்களைக் காணிக்கையாகக் கொடுத்து, தம்முடைய அருமந்தமகள் காந்ததருவதத்தையின் இசைச் சுயம்வரத்தைக் கூறி இதை நடத்த விடைதர வேண்டுமென்றும் இதற்கு அரசர் பெருமானே தலைமை தாங்கி முடித்துத்தர வேண்டுமென்றும் வேட்டுக்கொண்டார்.

தன்னுடைய நாட்டின் முதல் சீமானாகிய கிறீதத்தரின் விருப்பத் துக்கு இணங்கி, அரசர் இசைப் போட்டி நடத்த விடை கொடுத்ததோடு விழாவிற்குத் தலைமை தாங்கவும் உடன்பட்டார். உடனே கிறீதத்தர் இசைத் திருமணத்துக்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கிவிட்டார்.

இராசமாபுரத்தில் மட்டுமல்ல, சுற்றுப்புற நாடுகளிலும், நகரங் களிலும் இசைப் போட்டி நடக்கும் நாளையும் நடைபெறப் போகிற முறைகளையும் பறயச் செய்தார்.

ஆயிரக் கணக்கானவர் இருக்கத்தக்க பெரியதோர் அரங்கத்தை அமைத்தார். அரங்குகள் பெரிதாகவும் விசாலமாகவும் அழகாகவும் பெரும் பொருட் செலவில் அமைக்கப்பட்டது. அரங்கத்தின் எதிரில் எல்லோரும் காணத்தக்கபடி மேடையொன்று அலங்காரமாக அமைக்கப் பட்டிருக்கிறது. அரங்கத்தில் அமர்வதற்காகப் பால் போன்ற வெண் மணல் நிரப்பி மெத்தென்று காணப்படுகிறது. தோரணங்களும், கொடிகளும் அரங்கத்தை அழகு செய்கின்றன. அரசரும் அமைச்சரும் பிரபுக் களும் இருக்க ஆசனங்கள் மேடையருகே இடப்பட்டிருக் கின்றன.

எல்லோரும் எதிர்பார்த்திருந்த நாள் இது. முன்னர்க் கூறியபடி எல்லோரும் இசையரங்கத்தை நாடி வருகின்றனர். பலர் முன்னமே வந்து இடம் பிடித்துவிட்டனர். ஆடவருக்குரிய இடத்தில் ஆடவரும் மகளிர்க்குரிய இடத்தில் மகளிரும் சீமான் களுக்குரிய இடத்தில் சீமான்களும், அவரவர்க்குரிய இடங்களில் அவரவர் அமர்ந்திருக் கிறார்கள். அரசர் பெருமான் அமைச்சர் களுடன் வந்து ஆசனத்தில் அமர்கிறார்.