உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

173

முகத்தில் கண்கள் குழி விழுந்து கிடந்தன. பற்கள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. கூனல் முதுகும் நீண்டு மெலிந்த கைகளும் மெலிந்து போன விரல்களும் உள்ளவன். அவன் நடக்கும்போது அவனுடைய முட்டிகள், கழுதை நடக்கும் போது முட்டிக்கொள்வது போல முட்டிக்கொண்டன. இவ்வளவு அவலட்சணமும் போதாதென்று உடம்பில் புண்களும் இருந்தன.

இவன்தான் முன் இரவு மாளவப் பஞ்சம இராகத்தில் இசை பாடினவன். இவனுடைய பெயர் அட்டமா பங்கன். அவனுடைய விகாரமான உருவத்துக்கு ஏற்ற பெயர். இவ்வளவு அவலட்சணமும் விகாரமும் பொருந்தியவனைக் கண்ட போது தான் குணவதி திடுக்கிட்டு வியப்படைந்தாள். வெறுக்கத்தக்க இவனை உலகத்திலே எந்தப் பெண் விரும்புவாள்! நிச்சயமாக இராணி இவனை விரும்ப மாட்டாள். இதுவும் ஒரு நன்மைக்கே என்று நினைத்தாள். தான் வந்த காரியத்தைப் பற்றி ஒன்றும் அவனிடம் பேசாமல் வந்த வழியே திரும்பி விட்டாள். விரைந்து இராணியிடம் வந்தாள். இவளுடைய வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருந்த இராணியிடம் வந்து குணவதி தான் கண்ட அருவறுக்கத்தக்க விகார உருவத்தைக் கூறினாள்; இவ்வளவு குரூபியான இவனைப் பற்றின எண்ணத்தை இராணி விட்டு விடுவாள் என்று அவள் கருதினாள்.

மன்னமா தேவி! நின்னை வருத்துவான் வகுத்த கீதத்

தன்னவன் அத்திமாகன், அட்டமா பங்கன் என்பான்.

தன்னைமெய் தெரியக் கண்டே தளர்ந்துகண் புதைத்து மீண்டேன் என்னைநீ முனிதி என்றிட்டு இசைக்கலன் அவற்கீ தென்றாள். (அத்திபாகன்- யானைப்பாகன்; முனிதி- கோபிப்பாய்;

இசைக்கலன்- சொல்லவில்லை.)

நரம்புகள் விசித்த மெய்யன், நடையினில் கழுதை நைந்தே திரங்கிய விரலன் கையன், சிறுமுகன், சினவு சீரில் குரங்கனைய கூனன் குழிந்துபுக் கழிந்த கண்ணன், நெருங்கலும் நிரலுமின்றி நிமிர்ந்துள சிலபல் என்றாள் பூதிகந் தகத்தின் மெய்யில் புண்களும் கண்கள் கொள்ளா சாதியுந் தக்கதன்றால் அவன்வயின் தளரும் உள்ளம் தவிர்த்திட்டு நெஞ்சில் நிறையினைச் சிறைசெய் கென்றாள் கோதவிழ்ந் திட்ட உள்ள குணவதி கொம்மன் னாளே!