உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

179

மாளவியிடம் வந்து அவளுடைய ஆடல் பாடல்களை மெச்சிப் புகழ்ந்து பேசினான். அது கேட்டு அவள் மகிழ்ச்சியடைந்தாள். அந்தச் சந்தர்ப்பத்தில் அரசன் தன் காதலை அவளுக்குக் கூறினான். விதூசகன் விலகித் தூரத்தில் நின்று கொண்டிருந்தான். அக்கினி மித்திரனும் மாளவியும் தனியே பேசிக்கொண்டிருந்த போது இளைய இராணி ஐராவதி தன் தோழியுடன் பூங்காவுக்கு வந்தாள்.

அரசனும் மாளவியும் தனியே பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்களுக்குத் தெரியாமல் மறைவாக வந்து ஒரு பூம்புதரின் அருகில் நின்று செவிகொடுத்துக் கேட்டாள். அவர்கள் காதல் விஷயம் பேசுகிறார்கள் என்பதை அறிந்து சினங்கொண்டாள். உடனே தன்னுடைய தோழியை மூத்த இராணியிடம் இச்செய்தியைச் சொல்லி வரும்படி அனுப்பி விட்டுத் தான் மட்டும் அங்கேயே நின்று அவர்கள் பேச்சுகளைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

இது பற்றி முன்னமே அரசன் மேல் சந்தேகங் கொண்டிருந்த மூத்த இராணி இந்த விஷயத்தைக் கேட்டபோது அவளுக்குச் சினம் உண்டாயிற்று. அவள் மாளவியைச் சிறையில் அடைத்துத் தன்னுடைய நாகமுத்திரை மோதிரத்தைக் கண்டால் அன்றி அவளைச் சிறையி லிருந்து வெளிவிடக்கூடாது என்று சிறைச் சாலைச் சேவகனுக்குக் கட்டளையிட்டாள். மாளவி இராணியின் சிறையில் இருப்பதனால் அரசன் அவளை மறுபடியும் காண முடியவில்லை. அரசன் விதூஷச கனின் உதவியை மீண்டும் நாடினான். மாளவியைச் சிறையிலிருந்து விடுவித்துத் தன்னை அவளுடன் பேசும்படி குழ்ச்சி செய்து முடிக்க வேண்டும் என்று கூறினான். விதூஷகன் அதற்கும் உடன்பட்டான்.

விதூஷகன், அரண்மனைப் பூங்காவில் பூ கொய்தபோது பாம்பு ஒன்று அவன் கைவிரலில் கடித்துவிட்டது என்று அரண் மனையில் வதந்தி யுண்டாயிற்று. பாம்பு விஷத்தை இறக்க மந்திரவாதி அழைக்கப் பட்டான். மந்திரவாதி நாகமுத்திரை யுள்ள ஒரு மோதிரம் வேண்டு மென்றும் அந்த மோதிரத்தைக் கொண்டு மந்திரித்தால் விஷம் வெளி வந்துவிடும் என்று கூறினான். உடனே நாகமுத்திரையுள்ள மோதிரத்தைத் தேடினார்கள். நாகமுத்திரை மோதிரம் தாரணி இராணி அணிந்திருப்ப தாக அறிந்து இராணியிடம் அந்த மோதிரத்தை இரவலாகக் கொடுக்கும் படி கேட்டார்கள். விதூஷகன் ஆபத்தான நிலைமையிலிருப்பதால் இராணி இரக்கங்கொண்டு அந்த மோதிரத்தை விரலிலிருந்து சுழற்றிக்

6