உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

பிறந்துழி யறியாப் பெற்றித் தாகிச்

சிறந்திபம் பின்குரல் தெளிந்தவண் எழுவச் சுருக்கியும் பெருக்கியும் வலித்தும் நெகிழ்த்தும் குறுக்கியும் நீட்டியும் நிறுப்புழி நிறுத்தும் மாத்திரை கடலா மரபிற் றாகிக்

கொண்ட தானங் கண்டத்துப் பகாமைப் பனிவிசும்பு இயங்குநர் பாடோர்ந்து நிற்பக் கனிகொள் இன்னிசைக் கடவுள் வாழ்த்தித் தேவகீதமொடு தேசிகந் தொடர்ந்த

வேக இன்னிசை விளங்கிழை பாட

189

அரங்கத்திலிருந்தவர் கேட்டு இன்பமும் மகிழ்ச்சியும் அடைந்து இந்தப் பாடகி மானிடப் பெண்ணா தெய்வப் பெண்ணா என்று வியந்து புகழ்ந்தார்கள். பிரச்சோதன அரசன் தன்னுடைய மகளுக்கு இசைக் கலைக் கற்பித்த உதயணனுக்குப் பட்டாடைகளும் முத்து மாலைகளும் நவரத்தினங்களும் வழங்கி ஆசிரிய காணிக்கை செலுத்தி மகிழ்ந்தான்.

உதயணன் சிலகாலம் அங்குத் தங்கியிருந்து பிறகு தன்னுடைய இராச்சியத்துக்குப் போக விரும்பினான். பிரச் சோதன அரசனிடம் விடைபெற்றுத் தன்னுடைய நண்பனான வயந்தகனுடன் ஒரு யானை மேல் அமர்ந்து பயணந் தொடங்கினான். யானை மேல் அமர்ந்து தன்னுடைய யாழை வயந்தகனிடங் கொடுத்துவிட்டுத் தான் யானையைச் செலுத்தி நடத்தினான். நெருந்தூரஞ் செல்ல வேண்டி யிருந்தபடியால் யானையை மிக வேகமாகச் செலுத்தினான். யானை முல்லை நிலத்தைக் கடந்து பிறகு மலைகளுங் குன்றுகளும் காடுகளும் உள்ள குறிஞ்சி நிலத்தைக் கடந்துவிட்டது. பிறகு பாலை நிலத்தைக் கடக்க வேண்டியிருந்தது. பாலை நிலத்தில் பகல் வேளை யில் வெயில் கடுமையாகக் காய்ந்து அனல் வீசியபடியால், அந்த நிலத்தை இரவில் கடந்து செல்லக் கருதி அவ்வாறே இரவில் யானை மேல் ஏறிப் பயணஞ் செய்தார்கள். யானையும் காற்றைப் போல வேகமாகச் சென்றது. இடைவழியிலே மூங்கிற் புதர்களில் மூங்கில்கள் உயரமாக வளர்ந்திருந்தன. அதன் பக்கமாக யானை சென்றபோது, வயந்தகன் கையில் இருந்த உதயணனுடைய கோடபதி யாழ் மூங்கிலில் சிக்கிக் கொண்டது. யானை போகிற வேகத்தில், மூங்கிலில் சிக்கிக்கொண்ட யாழை எடுக்க முடியவில்லை. அப்போது வயந்தகன், 'உதயண! உன்னுடைய யாழ் மூங்கிலில் சிக்கித் தொக்கிக் கொண்டது.