உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

195

அப்போது அந்நாட்டரசனாகிய தருசகன், தன்னுடைய தந்தை பெரியந்திக் குவியலைப் புதைத்து வைத்த இடம் அறியாமல் அதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தான். அவன் எவ்வளவு முயன்றும் அந்தப் புதையல் இருக்குமிடம் அவனுக்குத் தெரிய வில்லை. இந்தச் செய்தியறிந்த உதயணன் தருசக அரசனிடம் சென்று தான் கண்டுபிடித்துத் தருவதாகக் கூறி, அது இருக்குமிடத்தைக் கண்டு எடுத்துக் கொடுத்தான். அதனால் தருசகன் இவனிடம் நண்பனானான். உதயணன் அந்நாட்டின் பூமியினுள் மறைந்து கிடக்கும் நீர்நிலைகளை யும் மன்னனுக்குக் காட்டினான். மன்னன் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்து அங்கு நீர்த்தேக்கம் இருப்பதைக் கண்டு நீர்நிலைகளை யுண்டாக்கி நாட்டின் விவசாயத்தை வளப்படுத்தினான். பிறகு தருசக மன்னன், இவன் வத்தவ நாட்டரசனான உதயணன் என்பதை அறிந்து மகிழ்ந்தான். கன்னிமாடத்திலிருந்து பதுமா பதியும் பிராமணன் வேடத்துடன் இருந்தவன் உண்மையில் வத்தவ நாட்டரசன் உதயணனே என்பதையறிந்தாள். பிறகு தருசகன் தன் தங்கையான பதுமாபதியை உதயணனுக்குத் திருமணம் செய்து வைத்தான். உதயணன் பதுமாபதியை அழைத்துக் கொண்டு தன் இராச்சியத் துக்குப் போய் அரசாண்டு கொண்டிருந் தான். அவன் முன்னமே வாசவ தத்தையைத் திருமணஞ் செய்திருந்த படியால், வாசவதத்தையும் பதுமாபதியும் அரண்மனையில் உதயணனுடன் வாழ்ந்து வந்தனர்.

ஒரு நாள் அரண்மனைக்கு எதிர்ப்பக்கத்தில் யாரோ யாழ் வாசிக்கின்ற இசையொலியை இசையொலியை உதயணன் உதயணன் கேட்டான். அந்த யாழிசையை ஓர்ந்து கேட்டபோது அது முன்பு தன்னிடமிருந்து மறைந்து போன கோடபதி யாழின் இசைபோல இருந்ததை யறிந்து வியப்படைந்தான். அதிசயமடைந்த அவன் தன்னுடைய அமைச்சனும் நண்பனுமான வயந்தகனை அழைத்து இச் செய்தியை அவனிடங் கூறினான்.

வயந்தகன் அந்த வீட்டுக்குச் சென்று அங்கு வாசித்துக் கொண்டிருந்த இசையாசிரியனைக் கண்டு அவனை யாழுடன் அரண் மனைக்கு அழைத்து வந்தான். உதயணன் அந்த யாழைக் கண்டதும், தான் முன்பு யானைமேல் யாத்திரை செய்தபோது வழியில் மூங்கில் புதரில் சிக்கிக்கொண்ட அது தன்னுடைய பழைய கோடபதி யாழ் என்பதை அறிந்து மிகவும் வியப்படைந்து “இந்த யாழ் உம்மிடம் எப்படி வந்தது என்று வினவினான் அதற்கு அந்த இசைப் புலவன் கூறினான்: