உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

203

கலைகளைப் பயின்று தேர்ச்சியடைந்தாள். இசை நாடகங்கள் அவளுடைய குல வித்தையாகையால் மாதவி ஆடல் பாடல் கலைகளில் தேர்ந்து பன்னிரண்டு வயதையடைந்தாள். அப்போது சித்திராபதி, மாதவியை சோழ அரச சபையில் அரங்கேற்றஞ் செய்ய ஏற்பாடு செய்தாள். அதன்படி, சோழன் கரிகால் பெருவளத்தரசனுடைய சபையிலே கலை வல்லவர் முன்னிலையிலே மாதவி அரங்கேறி ஆடல், பாடல், அழகு இவற்றில் தன் திறமையைக் காட்டினாள். அவையில் இருந்தவர் இவளுடைய கலைத் திறமையை மெச்சிப் புகழ்ந்தார்கள். சோழ மன்னன் கரிகால் வளவன் மாதவிக்குத் 'தலைக்கோலி' என்னும் பட்டத்தைக் கொடுத்து, அதற்கு அடையாளமாகத் தலைக் கோலைக் கொடுத்தான்.

ரு

தலைக்கோல் என்பது கெட்டியான மூங்கிற் கழியின் இரு தலையிலும் தங்கப் பூண் கட்டி இடையிடையே பொன் கட்டு இட்டு நவரத்தினங்களை இழைத்து அமைக்கப்பட்ட கோல். அந்தக் காலத்தில் இசைக் கலையில் தேர்ந்தவர்களுக்குத் தலைக் கோல் பட்டமும் தலைக்கோலும் கொடுப்பது வழக்கம். கரிகாற் சோழன் மாதவிக்குத் தலைக்கோலை யளித்துத் ‘தலைக்கோலி' பட்டத்தை வழங்கினதுமல்லாமல் தலைவரிசையாக ஆயிரத் தெட்டுக் கழஞ்சு பொன்னால் அமைத்த தங்கமாலையையும் அவளுக்குப் பரிசாக அளித்தான். அரசனிடத்திலே பட்டமும் பரிசும் பெற்ற மாதவி கலைஞர்களால் நன்கு மதிக்கப்பட்டாள்.

ஆ ல்

அந்தக் காலத்திலே காவிரிப்பூம்பட்டினத்தில் செல்வச் சீமானாக இருந்தவன் இளைஞனாகிய கோவலன். கோவலன் செல்வச் சீமான் மட்டுமல்லன்; அவன் இசைக் கலையையும் பயின்றவன். யாழ் வாசிப்பதிலும் இதைப் பாடுவதிலும் வல்லவன், கலை ரசிகன். அவன் மாதவியின் அழகு ஆடல் பாடல்களில் ஈடுபட்டு அவளைத் தன்னுடைய காமக்கிழத்தியாகக் கொண்டு அவளுடன் வாழ்ந்து வந்தான். அக்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்திலே ஆண்டுதோறும் இந்திர விழா நடந்தது. ஆண்டுதோறும் இருபத்தெட்டு நாள் தொடர்ந்து நடந்த இந்திர விழாவைச் சோழ மன்னன் அரசாங்கச் செலவில் சிறப்பாக நடத்தினான். விழாக் காலத்தில் மாதவியின் ஆடல் பாடல்கள் முக்கிய இடம் பெற்றன. நாடக அரங்கத்தில் யாழ் வாசித்தல், இசை பாடுதல், நடன நாட்டியங்களை ஆடுதல் முதலிய நிகழ்ச்சிகளை மாதவி செய்து நகர மக்களை மகிழ்வித்தாள்.