உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

நறுந்தா துண்டு நயனில் காலை வறும்பூ துறக்கும் வண்டு

205

போன்ற இயல்பு இவளிடம் இல்லை. சிப்பியில் பிறந்த முத்துப் போலவும் சேற்றில் பிறந்த தாமரை போலவும் இவள் விளங்கினாள். குலமகளைப் போலவே இவள் கோவலனுடன் வாழ்ந்து வந்தாள்.

ஆனால், மாதவியிடத்தில் ஒரே ஒரு குற்றம் இருந்தது. அந்தக் குற்றம் என்னவென்றால், தன்னுடைய பொருளாதார நிலைமைக்குத் தக்கபடி செலவு செய்யாமல் அளவுக்கு மீறின படாடோப வாழ்க்கை கொண்டிருந்ததுதான். இது எந்தக் காலத்திலும் எந்த நாட்டிலும், கணிகையருக்கும் நடிகையருக்கும் உள்ள குற்றமாகும்.

காவிரிப்பூம்பட்டினம் போன்ற நாகரீக நகரங்களிலே இப்படிப் பட்ட பகட்டு வாழ்க்கை இயற்கைதான். மாதவியும் பகட்டான படாடோப வாழ்க்கையே வாழ்ந்து வந்தாள். அந்தக் காலத்தில் ஆடைகளை அதிகமாக அணியும் வழக்கம் இல்லை. ஆனால் நகைகளை அதிகமாக அணியும் நாகரிகம் வளர்ந்திருந்தது. தங்க நகைகளும் முத்து, பவழம், மாணிக்கம், பச்சை, நீலம் முதலிய நவரத்தினக் கற்களும் அமைந்த நகைகளைச் செல்வர்கள், அக்காலத்தவர் அதிகமாக அணிந்தார்கள். நவரத்தின நகைகளை அணிவது அக்காலத்தில் நாகரிகத்துக்கும் செல்வத்துக்கும் அடையாளமாகக் கருதப்பட்டது. அக்காலத்து வழக்கப்படி மாதவியும் நவரத்தின நகைகளையும் பொன் நகைகளையும் அணிந்திருந்தாள். அவள் பாதம் முதல் முடிவரையில் அணிந்திருந்த நகைகளைச் சிலப்பதிகாரக் காவியங் கூறுகிறது.

அலத்தகம் ஊட்டிய அஞ்செஞ் சீறடி நலத்தகு மெல்விரல் நல்லணி செறீஇப் பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை அரியகங் காலுக கமைவுற அணிந்து, குறங்கு செறிதிரள் குறங்கினிற் செறித்துப் பிறங்கிய முத்தரை முப்பத் திருகாழ் நிறந்திகழ் பூந்துகில் நீர்மையின் உடீஇக் காமர் கண்டிகை தன்னொடு பின்னிய தூமணித் தோள்வளை தோளுக் கணிந்து மத்தக மணியொடு வயிரங் கட்டிய சித்திரச் சூடகம் செம்பொற் கைவளை