உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

207

வாசித்துப் பாட்டுப் பாடும்படி கேட்டாள். கோவலனும் யாழை வாங்கி நரம்பைப் பண் அமைத்துப் பாடினான். முதலில் காவிரியாற்றின் வளத்தையும் சோழ அரசனின் சிறப்பையும் பாடினான். பின்னர் அகப்பொருள் துறையமைந்த பாடல் களைப் பாடினான். ஊழ்வினை போலும். அவள் கருதாமலே அந்தப் பாடல்கள் காதலன் ஒருவன் புதிதாகத் தான் கண்ட ஒருத்தி மீது தன் காதலைத் தெரிவிக்கும் களவியல் துறைப் பாட்டாக இருந்தது.

கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் காமன் செயலெழுதித் தீர்ந்தமுகந் திங்களோ காணீர் திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே அங்கணேர் வானத் தரவஞ்சி வாழ்வதுவே.

திரைவிரி தரு துறையே திருமணல் விரியிடமே விரைவிரி நறுமலரே மிடைதரு பொழிவிடமே மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே

இருகயல் இணைவிழியே எனையிடர் செய்தவையே.

இவை போன்ற அகத்துறைப் பாடல்களைக் கோவலன் மனம் போன போக்கிலே மகிழ்ச்சியோடு பாடினான். அப்போது மாதவி ஊழ்வினை வலிபோலும், அவனைத் தவறாகக் கருதினாள். அவன் வேறு ஒருத்திமேல் காதல் கொண்டதை இப்பாடல்களின் மூலம் குறிப்பிடுகிறான் என்று அவள் தவறாகக் கருதிக் கொண்டாள். கோவலன் பாடி முடித்த பிறகு மாதவி அவன் கையிலிருந்த யாழைத் தன் கையில் வாங்கிப் பண் அமைத்துத் தானும் சில பாடல்களைப் பாடினாள். அந்தப் பாடல்களும் அகப்பொருள் துறை யமைந்ததாக இருந்தன. பெண் ஒருத்தி தன்னுடைய காதலனை எண்ணிப் பாடுவதுபோல அப்பாடல் அமைந்திருந்தது.

வாரித் தளர நகைசெய்து வண்செம்பவள வாய் மலர்ந்து சேரிப் பரதர் வலைமுன்றில் திரையுலாவு கடற்சேர்ப்ப

மாரிப் பீரத் தலர் வண்ணம் மடவாள்கொள்ளக் கடவுள் வரைந்து ஆரிக்கொடுமை செய்தா ரென்று அன்னையறியின் எண் செய்கோ?

கதிரவன் மறைந்தனனே காரிருள் பாரந்ததுவே எதிர்மலர் புரையுண்கண் எவ்வநீர் உகுத்தனவே

தளையவிழ் மலர்க்குழலாய் தணந்தார் நாட் டுளதாங்கொல் வளைநெகிழ எரிசிந்தி வந்தஇம் மருள்மாலை