உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

ஆடுமயில் இனங்களும் அங்கசைவற்று மருங்கணுக ஊடுசெவி இசை நிறைந்த உள்ளமொடு புள்ளினமும் மாடுபணிந்து உணர்வொழிய மருங்கு தொழில் புரிந்தொழுகும் கூடிய வண் கோவலரும் குறைவினையின் துறை நின்றார் (ஆனாய நாயனார் புராணம் 30, 31)

இயற்கை எழில் மிகுந்த அந்த முல்லைநிலக் காட்டிலே குழலிசை வல்ல ஆனாயர், இசையமுதத்தை வழங்கிக் கொண்டிருந்தார். நெடுங் காலம் தம்முடைய வாழ்நாள் முழுவதும் குழல் இசைத்துக் கொண்டிருந்தார். அந்த இசைக் குழலில் தெய்வீகமும் அமைதியும் நிறைந்திருந்தது. மனம் அமைதியடைந்தது. இன்பத்தில் திளைத்தது. நெடுங்காலம் ஆனாயனார் வேய்குழல் இசைத்து இன்னிசை யமுதத்தை வழங்கிக் கொண்டிருந்து கடைசியில் இயற்கை எய்தினார்.

இவருடைய குழல் இசைத் தொண்டினை நினைவுகூர்ந்து இவருக்குச் சிவன் கோயில்களில் உருவச்சிலை யமைத்திருக் கிறார்கள். அறுபத்து மூன்று சிவனடியார்களில் ஆனாயரும் ஒரு வேளடியாக விளங்குகிறார்.