உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

221

கூறுவோம். இவ்வாறு சிந்தித்து அரசன் 'இசைப் போட்டியை நாளைக்குத் தொடர்ந்து நடத்துவோம். அப்போது ஒருமுகமான முடிவை காண்போம்” என்று கூறி இசைப்போட்டியை மறுநாளைக்குத் தள்ளி வைத்தான்.

பாடினி சபையில் நடந்ததை நன்றாக உணர்ந்தாள். முதலில் தன்னை வெற்றி பெற்றதாகக் கூறியவர்கள், பிறகு அரசனுடைய மாறுபட்ட கருத்தை யறிந்து விறலி வென்றதாகக் கூறினார்கள். அரசன் நீதி வழங்காமல் அநீதி பேசுகிறான். நாளைக்கும் இவர்கள் எல்லோரும் சேர்ந்து அரசன் கருத்தையே தங்களுடைய கருத்தாகக் கூறுவார்கள். அரச சபையில் நடுநிலையான தீர்ப்புக் கிடைக்காது. இவ்வாறு கருதிய பாடினி அரசனை வணங்கி, “மன்னர் பெருமானே! நாளைக்கு நிகழும் இசைப் போட்டியைச் சொக்கப் பெருமான் திருக்கோயில் மண்டபத்தில் நடத்த அருள் புரிய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டாள்.

அரசன் மறுக்க இயலாமல் "அவ்வாறே ஆகட்டும்” என்று ஆணையிட்டான்.

தென்னாரே றனையாய்! ஞாலம் மனுவழிச் செங்கோல் ஓச்சும் மன்னரே றனையாய்! வார வழக்கினை யாதலால் நீ சொன்னவா றவையுஞ் சொல்லத் துணிந்தது. துலைநா வன்ன பன்னகா பரணர் முன்போய்ப் பாடுவோம். பாடும் எல்லை. இருவரேம் பாட்டுங் கேட்டுத் துணிந்திவள் வென்றாள் என்னா ஒருவர் சந்நிதியிற் சொன்னாற் போதும் என்றுரைத்தாள் பாண்டித் திருமகன் அனைய வாறே செய்மின் நீர் செய்மின் என்ன மருவளர் குழலினார் தம் மனைபுகுந்து இருந்தார் அன்னாள்

பாண்டியன் ஓரஞ்சாய்ந்து பேசியதைப் பற்றிப் பாடினி மனம் நொந்து வருந்தினாள். நேர்மையோடு நீதி வழங்க வேண்டிய அரசன் நடுவுநிலையில்லாமல் ஓரம் பேசியது பற்றி மனம் புழுங்கினாள். அரசன் நீதியாக இல்லாதபடியால் இனி நீதி வழங்க வேண்டியவர் சொக்கநாதக் கடவுளே என்று மனம் தேறினாள். அவள் சொக்கப் பெருமானை வணங்கி அவரிடம் முறையிட்டாள்.

னி

தென்னவன் ஆகிவையம் செய்ய கோல் செலுத்திக் காத்த மன்னவ! வழுதி வார அழிவழக் குரைப்ப தானான்

அன்னவன் கருத்துக்கேற்ப அவையரும் அனையர் ஆனார் பின் நடு நிலைமை தூக்கிப் பேசுவார் யாவர், ஐயா!