உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

227

யாழ் வாசிக்க முடியாத பதிகத்தைப் பாடும்படி சம்பந்தப் பிள்ளை யாரைக் கேட்டுக்கொண்டார். அவ்வாறே ஞானசம்பந்தர் பதிகம் பாடினார்.

மாதர் மடப் பிடியும் மட அன்னமும் அன்னதோர்

நடையுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்

பூதஇ னப்படைநின் றிசை பாடவும் ஆடுவர்

அவர் படர் சடைந் நெடு முடியதொர் புனலர் வேதமோ டேழிசைபா டுவர் ஆழ்கடல் வேண்டிரை

யிரைந் நுரை கரை பொரு துவிம்மிநின் றயலே தாதவிழ் புன்னைதயங் கும லர்ச்சிறை வண்டறை

யெழில் பொழில் குயில் பயில் தருமபுரம்பதியே

இது போன்று பதினொரு செய்யுட்களை ஞானசம்பந்தர் பாடினார். இதற்கு யாழ்முறிப்பதிகம் என்பது பெயர். இந்த இசையை யாழில் பண் அமைத்து இசைக்க முடியவில்லை யாகையால், நீலகண்டர், “இந்த இசையை யாழில் யமைக்க முடியாது, இந்த யாழ் இருந்து என்ன பயன்?” என்று கூறி அதைத் தரையில் அறைந்து உடைக்க முயன்றார். அப்போது ஞானசம்பந்தர் தடுத்து "இந்த இசையை யமைத்து வாசிக்க முடியாமற் போனாலென்ன? மற்ற இசைகளை அமைத்து வாசிக்கலாமல்லவா?” என்று கூறினார். நீலகண்டருக்கு அவர் கூறியது சரி என்று தெரிந்தது. பிறகு அந்த ஊரைவிட்டு வேறு ஊர்களுக்குச் சென்று பக்திப் பிரசாரஞ் செய்து இசை பாடினார்கள். இவ்வாறு சில ஆண்டுகள் கழிந்தன. திருநீலகண்ட யாழ்ப்பாணரும் திருஞான சம்பந்தரும் இசை வாசித்தும் பதிகம் பாடியும் பக்தி இயக்கத்தை நாட்டில் வளர்த்தார்கள்.

திருஞானசம்பந்தருக்குத் திருநல்லூர்ப் பெருமணம் என்னும் ஊரில் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்துக்குப் பல பெரியவர்களும் அடியார்களும் வந்திருந்து சிறப்புச் செய்தார்கள்.

திருமணத்துக்குப் பிறகு மணப்பந்தலில் பேரொளி தோன்றிற்று. ஞானசம்பந்தர் அந்தச் ஜோதியில் புகும்படி எல்லோரையும் அனுப்பினார். அவர்களோடு நீலகண்டப் பெரும்பாணரையும் மதங்க சூளாமணியாரையும் அனுப்பினார். கடைசியில் ஞானசம்பந்தர் தம்முடைய மணப்பெண்ணுடன் ஜோதியில் புகுந்து மறைந்தார் என்று புராணம் கூறுகிறது. பக்தி இயக்க காலத்தில் இசைக்கலை மூலமாகப் பக்தியை வளர்த்தவர் களில் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் ஒருவர்.