உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

235

அருகிலிருந்த அமைச்சர் பத்திரனைப் பார்த்து வினவினார்: “அந்த விறகு வெட்டி உம்முடைய சீடர்தானே."

“விறகு வெட்டியா! என்னுடைய சீடனா! எனக்கு அப்படி யாரும் சீடன் கிடையாதே!”

நேற்றுப் பிற்பகல் உன்னுடைய சீடனை ஏமநாதன் வீட்டண்டை சென்று இசை L பாட நீர் நீர் அனுப்பவில்லையா? ஏமநாதனை ஊரைவிட்டுப் போகும்படி விரட்டவில்லையா?

ம்

“இல்லை. யாரையும் நான் அனுப்பியதில்லை. விறகு வெட்டி யாரும் எனக்குச் சீடனாக இருந்ததில்லை. இது உண்மை. ஏமநாதனுடைய சீடர்கள் நகரத்தில் ஆங்காங்கே பாடியதை நான் கேட்டு வியந்த துண்டு. ஆனால், என்னுடைய சீடர்களை ஏமநாதனிடம் அனுப்பி நான் இசைபாடச் செய்யவில்லை. இது முக்காலும் உண்மை!உண்மை! உண்மை!” பாணபத்திரன் உண்மையைக் கூறுகிறான் என்பது தெரிந்தது. பாண பத்திரன் தன்னுடைய சீடனை அனுப்பி ஏம நாதனை விரட்டிவிட்டான் என்று தாங்கள் ஊகித்தது தவறு என்று உணர்ந்தார்கள்.

அப்படியானால் அந்த விறகுத் தலையன் யார்? அவன் ஏன் தன்னைப் பாணபத்திரனின் சீடன் என்று சொல்லிக் கொண்டான்? இதுபற்றி எல்லோரும் வியப்படைந்தார்கள். பாணபத்திரனும் வியப்படைந்தான்.

இது எல்லோருக்கும் புதுமையாக இருந்தது.

-

பாணபத்திரன் சொக்கப் பெருமானுடைய பக்தன். அவன் நாள்தோறும் இரவில் சொக்கநாதர் கோவிலுக்குப் போய் உருக்கமாக இசை பாடுகிறான். சொக்கப் பெருமானே விறகு வெட்டி போல வந்து பத்திரனுடைய சீடன் என்று சொல்லிக் கொண்டு ஏமநாதனிடம் இசை பாடி இருக்க வேண்டும். அந்த இசைப் பாட்டைக் கேட்டு ஏமநாதன் ‘சீடனுடைய இசையே இப்படி என்றால் ஆசிரியனுடைய இசை எப்படி இருக்கும்' என்று எண்ணி அச்சங்கொண்டு இரவோடு இரவாக ஊரை விட்டுப் போயிருக்க வேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். சிவபக்தனாகிய வரகுண பாண்டியன் இவ்வாறே எண்ணினான்.

வரகுண பாண்டியன் பாணபத்திரன் மேல் பெருமதிப்புக் கொண்டான். “நீர் இன்று முதல் என்னுடைய இசைப் புலவர் அல்லர்.