உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

செருமா வுசைக்கும் சேரலன் காண்க. பண்பால் யாழ்பயில் பாண பத்திரன் தன்போல் என்பால் அன்பன், தன்பால் காண்பது கருதிப் போந்தனன்

மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே

239

இந்தத் திருமுகச் செய்யுளைப் படித்துப்படித்து அளவிலா மகிழ்ச்சியடைந்தான் பாணபத்திரன். முன்னாள் இரவு கனவில் தோன்றி இறைவன் கூறியதும் இன்று காலை திருமுக ஏடு கிடைக்கப் பெற்றதும் ஆகிய இவற்றை எண்ணி எண்ணி மனங் கனிந்தான். திருமுகக் கடிதத்தைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு தலைமேல் வைத்துப் போற்றினான். இவற்றை எல்லாம் அருளிய இறைவனுடைய திருவருளை வியந்தான், வணங்கினான்.

விரைந்து இல்லத்துக்குச் சென்று தன் மனைவி பாடினியை அழைத்துத் திருமுகத்தை அவளுக்குப் படித்துக் காட்டினான். இறைவன் நம்முடைய வறுமையைப் போக்கத் திருவுளங் கொண்டார். இன்றே சேரமானிடம் செல்கிறேன் என்று கூறினான். பாடினி பெரிதும் மகிழ்ந்தாள். இறைவன் திருவருளை எண்ணி அவர்கள் சொக்கப் பெருமானை வணங்கினார்கள்.

-

பாணபத்திரன் சேரமான் பெருமாளை நாடிச் சேர நாட்டுக்குப் புறப்பட்டான். நாட்டு வழிகளையும் காட்டு வழிகளையும் கடந்து சில நாட்களில் கொடுங்கோளூர்ப் போய்ச் சேர்ந்தான்.

முன்னமே பத்திரனுடைய வருகையை அறிந்திருந்த சேரமான் பெருமாள் பத்திரனை அன்போடு வரவேற்றார். “எம்பெருமான் உம்முடைய வருகையை எமக்கு முன்னமே அறிவித்தருளினார். உம்முடைய வருகையை நாம் எதிர்பார்த் திருந்தோம்!" என்று கூறி வரவேற்று உபசரித்துப் போற்றினார். பாணபத்திரன் தான் ஆலவாய்த் திருக்கோயிலிலிருந்து கிடைத்த திருமுக ஓலையைச் சேரமான் கையில் கொடுத்தார்.

அதனைப் பெற்றுச் சேரமான் அதைத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டு தலை மேல் வைத்து இறைவனை நினைத்து வணங்கினான். பிறகு படித்துப் பெரு மகிழ்ச்சி யடைந்தான்.