உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

31

உறவினரைப் பெற்றது போலாகும். (மோக்ஷம்) வீடுபேறு பெறுவது இவை எல்லாவற்றிலும் பேரின்பம் தருவதாகும்.”

குறிப்பு: புத்தர் பெருமான், உணவுகொள்ளும் அளவைப் பற்றி அருளிச்செய்த பொன் மொழியோடு திருவள்ளுவர் அருளிச்செய்த பொன்மொழிகளையும் மனத்திற் ப கொள்வது பயனுடைத்து,

அப்பொன்மொழிகளாவன:

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

கழிபே ரிரையான்கண் நோய்.

அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு.

அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.

மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபாடில்லை உயிர்க்கு.