உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள் 57

66

கும்பகோசன், "இங்கே இடமில்லை; வேறு எங்கேனும் போய்க் கேளுங்கள்" என்று கூறினான். அவள் மீண்டும் ம் மீண்டும் வேண்டினாள் அவன் மீண்டும் முடியாது என்று மறத்தான். சண்பகம் விடவில்லை. கும்பகோசன் மனம் இளகும்படி மிகவும் வினயமாக, ஐயா! நாங்கள் அதிகக் களைப்போடு இருக்கிறோம். பல இடங்கள் சென்று அலைந்துதிரிந்து இடம் பார்க்க எங்களால் முடியாது. உடலில் சக்தி இல்லை. இன்று ஒரு நாள் மட்டும் இடம் கொடுங்கள். நாளைப் பொழுது விடிந்ததும் போய் விடுகிறோம்” என்று கூறி அங்கேயே உட்கார்ந்து கொண்டாள். அவன் வேண்டாவெறுப்பாக முணுமுணுத்துக் கொண்டே ஒப்புக்கொண்டான்.

கும்பகோசன் விடியற் காலையில் எழுந்து தன் தொழிலுக்குப் புறப்பட்டான். அப்போது சண்பகம், "ஐயா! சமையல் செய்து வைக்கிறேன். காசு கொடுத்துவிட்டுப் போங்கள்" என்றாள்.

-

“வேண்டாம் நான் வந்து சமைத்துக் கொள்வேன்” என்றான். அவள் விடவில்லை. “ஏன் ஐயா உங்களுக்கு வருத்தம்? இன்று ஒரு நாளைக்கு நான் சமைக்கிறேன்; சாப்பிடுங்களேன்” என்று வற்புறுத்தினாள்.

அவன் சம்மதப்பட்டு, தனக்கு மட்டும் வேண்டிய உணவுக்கு அவளிடம் காசு கொடுத்தான். கொடுத்து வேலைக்குப் போய் விட்டான். விடிந்தவுடன் சண்பகம் கடைக்குப்போய், தான் கொண்டுவந்திருந்த பணத்தில் சமையற் பாத்திரங்களையும் அரிசி, பருப்பு, காய்கறி முதலிய வற்றையும் வாங்கிவந்தாள். அரண்மனையில் சமைத்துப் பழகினவள் ஆகையால் சுவையுள்ள உணவை நன்கு சமைத்து வைத்தாள். கும்ப கோசன் வந்தவுடன் தன் கையாலேயே அவனுக்கு உணவளித்தாள்.

கும்பகோசன் இத்தகைய உணவை இதுவரையில் உண்டதில்லை. சுவை மிகுந்த உணவை அவன் மகிழ்ச்சியோடும் திருப்தியோடும் சாப்பிட்டான். சாப்பிட்டவுடன் களிப்போடு உட்கார்ந்து இருந்தான். அச்சமயம் சண்பகம், “ஐயா! நாங்கள் அதிக தூரம் பிரயாணம் செய்திருக்கிறோம். இங்கே தங்கிக் களைப்பாற்றிக் கொண்டு எங்கள் ஊருக்குப் புறப்பட்டுப் போகிறோம். தயவுசெய்து நாலு நாட்களுக்கு இடம் கொடுத்தால் போதும்” என்று நயமாகக் கேட்டாள்.

கும்பகோசன் யோசித்தான். 'நளபாகம், வீமபாக மென்பார்களே! அத்தகைய உணவை இவள் சமைக்கிறாள். அத்தகைய சாப்பாட்டை