உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

சண்பகமும் மல்லிகையும் உயர்ந்த ஆடையணிகள் அணிந்து அலங்காரம் செய்துகொண்டு நிற்பதையும், தன்னைக் கண்டு நகைப்பதையும் கண்டான். அவனுக்கு உண்மை விளங்கிவிட்டது. தன்னுடைய உண்மை நிலையை எப்படியோ கண்டுபிடித்து விட்டார்கள். இனி, மறைப்பது வீண்முயற்சி என்று அறிந்து அவன் அரசரை வணங்கி இவ்வாறு கூறினான்:

66

"மகாராஜாவே! சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரபு இந்த நகரத்தில் இருந்தார். அப்போது இந்நகரத்தில் கொள்ளை நோய் உண்டாயிற்று. கொள்ளை நோய் அந்தப் பிரபுவின் வீட்டிலும் பரவிற்று. கொள்ளை. நோய்க்குத் தப்பித்துக்கொள்ள ஜனங்களில் பலர் வேறு இடத்திற்குப் போய்விட்டார்கள். அந்தப் பிரபு வேறு இடம் போக வில்லை. பிரபுவின் வீட்டிலே முதலில் ஆடு மாடுகள் இறந்தன. பிறகு அடிமைகளும் வேலையாட்களும் நோய் கண்டு இறந்தனர். பின்பு குடும்பத்திலுள்ளவர்களில் பலர் இறந்துபோனார்கள். கடைசியில் பிரபுவுக்கும் அவர் மனைவிக்கும் அந்நோய் கண்டது, அப்போது அவர்கள் தம் ஒரே மகனான சிறுவனைக் கொள்ளை நோய்க்குத் தப்பித்திருந்த ஒரு கிழ வேலைக்காரனிடம் ஒப்படைத்தார்கள். 'நீங்களிருவரும் இந்த இடத்தைவிட்டு வேறு ஊருக்குப் போய் விடுங்கள். கொள்ளை நோய் போனபிறகு இவ்விடம் வந்து இன்ன இடத்தில் தோண்டிப் பாருங்கள். அங்கு ஒரு கோடி பொன், நம் குடும்பச் சொத்து இருப்பதைக் காண்பீர்கள். அதை வைத்துக்கொண்டு சுகமே இருங்கள். நாங்கள் இனிப் பிழைக்க மாட்டோம். உடனே நீங்கள் போய்விடுங்கள்” என்று அனுப்பினார்கள்.

66

"நம்பிக்கையுள்ள அவ்வேலைக்காரக் கிழவன் அந்தச் சிறுவனை அழைத்துக்கொண்டு ஒரு கிராமத்திற்குச் சென்றான். அது குக்கிராமம். மலையையடுத்த காட்டின் அருகில் இருந்தது. அது அக் கிழவன் பிறந்த கிராமமாகையால் அவன் அச்சிறுவனுடன் தங்கினான். கிழவனும் சிறுவனும் சில ஆண்டுகள் அங்கேயே தங்கியிருந்தார்கள். கடைசியில் கிழவன் இறந்துவிட்டான். சிறுவன் மட்டும் அவ்வூரி லேயே தங்கியிருந்தான். ஆண்டுகள் சில சென்றன. சிறுவனும், காளை யானான் அவனுக்குத் தன் தாய், தந்தையர் சொன்னதும் அவர்கள் செல்வம் புதைத்து வைத்திருக்கும் இடமும் ஞாபகத்தில் இருந்தன. ஒருநாள் அவன் புறப்பட்டுக் கால்நடையாக நடந்து இந்நகரத்தை