உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள் / 67

இதனால், எல்லோர் உள்ளத்திலும் ஒருவிதப் பரபரப்புத் தோன்றியது. ஆனால், கூட்டத்தில் அமைதி நிலவியது.

பகவர் மௌனமாக இருந்தது. சிஞ்சா மாணவிகைக்கு மேலும் ஊக்கம் அளித்தது. அவள் “ஏன் பேசாமல் இருக்கிறீர்? எனக்கு ஒரு வழி செய்து கொடுங்கள்” என்று கூறினாள். பகவர் அப்போதும் மௌனமாகவும் அமைதியாகவும இருந்தார்.

அப்பெரிய கூட்டத்திலே பெண்மணிகள் அமர்ந்திருந்த இடத்திலே சற்று வயதுசென்ற அம்மையார் ஒருவர் எழுந்து நின்றார். எல்லோருடைய பார்வையும் அந்த அம்மையாரிடம் சென்றன. அம்மையார் இவ்வாறு கேட்டார்: “சிஞ்சா மாணவிகே! உங்களுக்கு எத்தனை மாத கர்ப்பம்?

66

"ஒன்பது மாதம் நிறைந்துவிட்டது. இது பத்தாவது மாதம்!”

இவை

வேண்டப்படாத கேள்வியும் விடையும் விடையும் என்று பல்லோரும் எண்ணினார்கள்.

மூதாட்டியார், “இல்லை. உனக்குக் கர்ப்பமே இல்லை. நீ பொய் சொல்லுகிறாய்! வீணாகப் பொய்க் குற்றம் சாட்டுகிறாய்!"

மூதாட்டியார் கூறியது, முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோல் தோன்றிற்றுப் பலருக்கு. வயிற்றைப் பார்த்தாலே தெரிகிறதே முழுக் கர்ப்பம் என்று. இல்லை என்று சொல்லுகிறார் அம்மையார். இது என்ன பைத்தியக்காரத்தனம்!

மூதாட்டியார், சிஞ்சா மாணவிகை அருகில் சென்றார். சிஞ்சா மாணவிகை, “அருகில் வராதே, தூரத்தில் நில்" என்றாள். அம்மையார் நிற்கவில்லை. அருகில் சென்றார். கர்ப்பவதி, அம்மையாரைத் தள்ளினாள். அம்மையார் அவள் வயிற்றைத் தடவிப் பார்த்தார். மாணவிகை தன்னைத் தொடவிடாமல் சண்டித்தனம் செய்தாள். அம்மையார் விடவில்லை. இருவருடைய சச்சரவுக்கிடையே மாணவிகையின் வயிற்றிலிருந்து ஒரு கனத்த பொருள் தொப்பென்று கீழே விழுந்தது. அம்மையார் அந்தப் பொருளைக் கையில் எடுத்தார்; அது திரண்டு அரை வட்ட வடிவாகச் செய்யப்பட்ட ஒரு மரத்துண்டு! அம்மையார் அதைக் கையில் பிடித்து உயரத் தூக்கிக்காட்டி, “இதோ பாருங்கள். இதுதான் சிஞ்சா மாணவிகையின் ஒன்பது மாதக் கர்ப்பம்’ என்று கூறினார்.