உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. அஜாதசத்துருவின் அதிகார வேட்கை

பகவன் புத்தருக்கும் அவருடைய பௌத்த மதத்திற்கும் நாட்டிலே அதிகச் செல்வாக்கு ஏற்பட்டிருந்தது. மகத நாட்டு மன்ன ராகிய பிம்பசார அரசர், புத்தருடைய தொண்டராக இருந்து பௌத்த மதத்தின் வளர்ச்சிக்காகப் பல பெருந் தொண்டுகள் செய்து வந்தார். ஆகவே, மற்ற மதங்களைவிடப் பௌத்த மதம் அதிகப் புகழும் பெருமையும் மதிப்பும் பெற்று இருந்தது.

ס.

புத்தருடைய மருகன் தேவத்தன் என்பவன் பௌத்த மதத்தில் சேர்ந்து பிக்ஷவாக இருந்தான். பௌத்த மதத்திற்கிருந்த புகழையும் பெருமையையும் கண்டு இவனுக்கு ஓர் ஆசை தகுதியற்ற ஒரு பேராசை உண்டாயிற்று. பிக்ஷ சங்கத்திற்கும் பௌத்த மதத்திற்கும் தானே தலைவனாகவேண்டும். பகவன் புத்தர் அடைந்துள்ள சிறப்பை யும் புகழையும் தான் அடைய வேண்டும் என்பதுதான் இவனுக்கு உண்டான பேரவா. இந்தப் பதவிக்குச் சிறிதும் தகுதியற்ற இவன், இந்தப் பதவியில் அமர உறுதி செய்துகொண்டான். ஆனால், பகவன் புத்தரும் பிம்பசார அரசரும் உயிரோடு உள்ளவரையில் தனக்கு இந்தத் தலைமைப் பதவி கிடைக்காது என்பதை நன்றாக அறிந்தான். ஆகவே பகவன் புத்தரைக் கொன்றுவிட்டு அவர் இடத்தைத் தான் கைப்பற்றவும், பிம்பசார அரசனைக் கொன்றுவிட்டு அவர் இடத்தில் அவருடைய மகனும் தன் சீடனுமாகிய அஜாதசத்துருவை அரசனாக்க வும் எண்ணங் கொண்டான். இந்த எண்ணத்தில் உறுதியும் ஊக்கமும் கொண்டு, தன்னுடைய கருத்து நிறைவேறும் வகையில் சுறுசுறுப்பாக வேலைசெய்யத் தொடங்கினான்.

அரசகுமாரனான அஜாதசத்துரு அரண்மனையிலே தனித் திருந்த சமயத்தில் தேவதத்தன் சென்று அவனைக் கண்டான். தேவதத் தனிடத்தில் அஜாதசத்துரு பயபக்தியுடையவன். அவனிடத்தில் மதிப்புடையவன்; தேவதத்தனும் அரச குமாரனைத் தன் சீடன் முறையில் வைத்துப் பழகிவந்தான். அஜாதசத்துரு, தேவதத்தனைப் போலவே இயற்கையில் தற்பெருமையும் அதிகார ஆசையும் உள்ளவன். தேவதத்தன், ஆசை வார்த்தைகளைப் பேசி அஜாத