உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள் /79

இன்புறுகிறவள். சிறீமதி, சேதியம் பாழடைந்து கிடப்பதைக் கண்டாள். அதன் காரணத்தையும் அறிந்தாள். மனம் வருந்தினாள். அரசன் ணையை மீறிச் சேதியத்தைச் சிறப்புச் செய்யத் துணிந்தாள். இப்படிச் செய்வதனாலே தன் உயிரைக் கொடுக்கவேண்டும் என்பதை இவள் நன்கறிவாள். உயிரைக் கொடுக்கவும் முடிவு செய்து கொண்டாள்.

சிறீமதி சேதியத்துக்குச் சென்றாள். சென்று, திருவல கிட்டுத் தூய்மைப்படுத்தினாள். விளக்கு ஏற்றி வைத்தாள். மலர்களை மாலையாகக் கட்டி அதனைக் சூட்டி அழகு படுத்தினாள். சேதியம் பொலிவு பெற்றிருப்பதைக் கண்டு மனம் பூரித்தாள். தலை வணங்கிப் பணிந்து தொழுதாள். அப்போது அவளுடைய மனத்திலே அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கிற்று. சிறீமதி சேதியத்திற்குச் சிறப்புச் செய்து வணங்கிய செய்தி அஜாதசத்துருவின் காதுக்கு எட்டிற்று. அரண் மனை ஊழியக்காரி ஒருத்தி தன் ஆணையை மீறி நடந்ததற்காக அவன் அடங்காச் சினங்கொண்டாள். அவளை அழைத்துவரும்படி ஆணை யிட்டான். சிறீமதி தனக்குக் கிடைக்கப்போகிற தண்டனை இன்ன தென்பதை நன்றாக அறிவாள். ஆனாலும், அவள் சிறிதும் கவலைப் படாமல் மகிழ்ச்சியோடு அரசன் முன் சென்று வணங்கி நின்றாள்.

அஜாதசத்துருவின் கண்களில் தீப்பொறி பறந்தன. “நமது கட்டளையை மீறி நீ சேதியத்திற்குச் சிறப்புச் செய்தாயா?” என்று கேட்டான்.

66

"ஆம். அரசே! அரசருடைய கட்டளையை மீறி நடந்தேன். ஆனால், பழைய அரசரின் ஆணைக்குக் கீழ்ப்படிந்து நடந்தேன்.

இறுமாப்புள்ள அஜாதசத்துருவுக்கு, இவள் கூறிய விடை பெருஞ்சினத்தையுண்டாகிற்று. அவன் கோபத்தினால் ஆவேசங் ஆ

கொண்டான்.

66

'ஆ

وو

என்று எழுந்தான். அதே சமயத்தில் அவனுடைய இடதுபுறத்து அரையில், உறையிலே கிடந்த குற்றுவாள் அவனுடைய வலக்கையில் காணப்பட்டது. அடுத்த வினாடியில், கட்டாரி அவள் மார்பிலே பாய்ந்தது.

இந்த முடிவைச் சிறீமதி முன்னமே அறிந்து எதிர்பார்த் திருந்தவள் ஆகையால், அவள் வியப்படையவில்லை. வருத்தம்