உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

97

தூற்றுவார்கள். என் செய்வது! கொலைக்களத்திலிருந்து அவன் உயிரை மீட்பதற்குக் காரண மாய்இருந்த தான், தன்கைகளாலேயே அவனைக் கொல்ல நேர்ந்த ஊழ்வினையை எண்ணி அவள் மனம் பதறினாள். இந்நிலையில் தன் பெற்றோரிடம் செல்வது தகுதியல்ல வென்று நினைத்தாள். இனித் தனக்கு இவ்வுலக வாழ்வு மறைந்துவிட்டது என்று உறுதி செய்துகொண்டாள். அப்போது அவள் மனத்திலே ஏதோ ஒரு துணிவு ஏற்பட்டது. உடனே அந்த மலையுச்சியி லிருந்து மடமட வென்று கீழே இறங்கினாள். ஏறின வழியே இறங்காமல், வேறுபுறமாக இறங்கி மலையடிவாரத்தை அடைந்தாள். எங்கும் பாறைகளும் புதர்களும் மரங்களும் காணப்பட்டன. முள்ளும் கல்லும் நிறைந்த அக்காட்டின் வழியே அவள் நடந்துசென்றாள். நெடுந்தூரம் நடந்தாள். பின்னர்க் காட்டைக் கடந்து வெட்ட வெளியான இடத்திற்கு வந்தாள்.

அங்கு ஒற்றையடிப்பாதை காணப்பட்டது. அப்பாதை வழியே நடந்தாள். அந்தப் பாதை சற்றுத் தூரத்திற்கப்பால் மரங்கள் அடர்ந்த ஒரு தோப்பிற்கொண்டு போய்விட்டது. தோப்பிற்குள் ஓர் ஆசிரமம் காணப்பட்டது. பத்திரை அதற்குள் சென்றாள். மழித்த தலையும் தூய வெள்ளிய ஆடையும் அணிந்த மகளிர் சிலர் அங்குக் காணப் பட்டார்கள். இவர்களைக் கண்டதும், இது ஆரியாங்கனைகள் மடம் (சமண சமயத்துக் கௌந்திகள் வசிக்கும் மடம்) என்பதை அறிந்து கொண்டாள். தான் மேற் கொள்ள நினைத்திருந்த வாழ்க்கை நிலைக்கு ஏற்ற இடம் என்று தனக்குள் கூறிக்கொண்டாள்.

பத்திரையைக் கண்டதும் சில ஆரியாங்கனைகள் அவளை அழைத்துக்கொண்டு ஆசிரமத்திற்குள்ளே சென்றார்கள். தலைமை ரியாங்கனையிடத்தில் பத்திரை தனது வரலாற்றை முழுவதும் கூறினாள். பின்னர், தான் துறவற வாழ்க்கையை மேற்கொள்ள விரும்புவதாகத் தன் கருத்தைத் தெரிவித்தாள். இவள் விருப்பத்திற்கு உடன்பட்டு அவர்கள், இவளைத் துறவியாகச் சேர்த்துக் கொண்டார்கள். தமது சமய ஒழுக்கப்படி, பத்திரையின் கூந்தலை மழித்து, தூய வெள்ளிய ஆடையை உடுத்தினார்கள். அன்று முதல் பத்திரை அந்த மடத்தில் தங்கி இருந்தாள். அவளுடைய மழித்த தலையில் மயிர் மீண்டும் வளர்ந்து சுருண்டுகிடந்தது. ஆகவே, பத்திரை, குண்டல கேசி - சுருட்டை மயிர் உடையவள் என்று அழைக்கப்பட்டாள். மடத்திலே குண்டலகேசி வீணாகக் காலங்கழிக்கவில்லை. கற்றுத் தேர்ந்த ஆரியாங்கனைகளிடம் சமய சாத்திரங்களை ஓதி உணர்ந்தாள்.

"