உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. சேரிவான் ஜாதகம்

பகவன் புத்தர் சாவத்தி நகரத்தில் இருந்தபோது, முயற்சி யில்லாத பிக்குவைப் பற்றி இக்கதையைக் கூறினார்.

அந்தப் பிக்குவைப் பார்த்துப் பகவன் புத்தர் கூறினார்: "பிக்குவே! பெருமையுள்ள அறநெறியினால் நற்கதியடையும் வாய்ப்புப் பெற்றிருந்தும், முயற்சி இல்லாமல் இருந்ததால், சேரிநாட்டுக் கன்னான் பொன்கலயத்தை இழந்ததுபோல, நீரும் நன்மையை இழந்து விடுவீர்” என்று கூறினார். இதைக்கேட்ட மற்ற பிக்குகள் சேரிநாட்டுக் கன்னான் கதையைக் கூறும்படி கேட்டார்கள். பகவன் புத்தர் இக்கதையை அவர்களுக்குச் சொன்னார்.

ஐந்து கற்பகாலத்துக்கு முன்பு ஒரு காலத்திலே சேரி நாட்டிலே போதிசத்துவர் தட்டுமுட்டுச் சாமான் விற்கும் கன்னானாக இருந்தார். அவரை எல்லோரும் சேரிவான் என்று அழைத்தார்கள். இன்னொரு கன்னர் கூட்டத்திலே தட்டு முட்டுச் சாமான் விற்கும் ஒரு ஆள் இருந்தான். அவனையும் சேரிவான் என்று மக்கள் அழைத்தார்கள். அவன் பேராசைக்காரன். அவன் தேவவாகை என்னும் ஆற்றைக் கடந்து அண்டபுரம் என்னும் நகரத்துக்கு வந்தான். கன்னார் இருவரும் நகரத்தை இரு பிரிவாகப் பிரித்துக்கொண்டு அந்தத் தெருக்களில் சாமான்களை விற்கச் சென்றார்கள்.

அந்த நகரத்திலே நொந்துபோன ஒரு குடும்பம் இருந்தது. அந்தக் குடும்பம் முன்னொரு காலத்தில் செல்வத்தோடு வாழ்ந்திருந்தது. நமது கதை நிகழ்கிற இக்காலத்தில் அக்குடும்பம் ஏழையாகி, ஆண்மக்கள் எல்லோரும் இறந்துபோய், ஒரு கிழவியும் அவள் பேத்தியும் ஆக இரண்டுபேர் மட்டும் இருந்தார்கள். இவர்கள் வீடுகளில் வேலைசெய்து வாழ்க்கையை நடத்தினார்கள். ஆனால், இவர்கள் வீட்டிலே சட்டி பானைகளோடு ஒரு பொன் தட்டு இருந்தது. இந்தப் பொன் தட்டிலே, முன்னொரு காலத்தில் அவ்வீட்டுத் தலைவனான சீமான் உணவு அருந் தினான். ஆனால், அந்தத் தட்டு நெடுநாளாக உபயோகப்படாமல் அழுக்குப்பிடித்துத் தூசு படிந்திருந்தது. அது பொன் தட்டு என்பதை