உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. குட்டில ஜாதகம்

இந்தக் கதையைப் பகவன் புத்தர் வெளுவனம் என்னும் மூங்கிற் காட்டில் தங்கியிருந்தபோது கூறினார்.

புத்தரின் சீடர்கள் தேவதத்தனிடம் இவ்வாறு கூறினார்கள்: "தேவ தத்தரே, பகவன் புத்தர் உமது ஆசிரியர். அவரிடம் பிடகம் முதலிய நூல்களைத் தாங்கள் கற்றீர்கள். உமது ஆசிரியருக்கு நேர் மாறாக நீர் பகைமை பாராட்டுவது கூடாது” என்று கூறினர். அதற்குத் தேவதத்தன், “என்ன? கௌதம முனிவர் எனது ஆசிரியரா? ஒருபோதுமில்லை. என்னுடைய சொந்த அறிவினாலே நான் பிடகம் முதலிய நூல்களை அறிந்தேன்” என்று கூறி, பகவன் புத்தரைத் தனது ஆசிரியர் என்று ஒப்புக்கொள்ள மறுத்தான்.

கந்தகுடிக்குச் சென்ற சீடர்கள் தேவதத்தனைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டனர். “தேவதத்தன், பகவன் புத்தருக்குப் பகைவனாகி விட்டான். அவன் பகவரைத் தனது குருவாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். அவனுக்கு என்ன கதி கிடைக்குமோ?” என்று சொல்லிக்கொண்டனர். அவ்வமயம் பகவன் புத்தர் அங்கு வந்தார். அவர்கள் பேசிக்கொண்ட செய்தியை அறிந்தார். “பிக்ஷகளே! இதுதான் முதல் தடவையன்று. தேவதத்தன் இதற்கு முன்பும் தன் குருவைப் பகைத்துத் துன்ப மடைந்தான்” என்று பகவன் புத்தர் கூறி இந்தக் கதையைச் சொன்னார்:

வாரணாசி நாட்டைப் பிரமதத்தன் என்னும் அரசன் அரசாண்ட முன்னொரு காலத்திலே, போதிசத்துவர் இசை வாணர் குலத்திலே பிறந்தார். அவருடைய பெயர் குட்டிலன் என்பது. அவர் இளமையி லேயே இசைக்கலையில் தேர்ச்சியடைந்து, குட்டிலப் புலவன் என்னும் பெயர்பெற்றுப் பரதகண்டம் முழுவதிலும் இருந்த இசைப் புலவருக் கெல்லாம் தலைவராக விளங்கினார். அவர் திருமணம் செய்துகொள்ள வில்லை. வயது முதிர்ச்சியினால் பார்வையிழந்திருந்த தமது தாய் தந்தையரை அவர் போற்றிப் பாதுகாத்து வந்தார்.

அக்காலத்திலே வாரணாசி நாட்டிருந்து சில வணிகர்கள் உச்சையினி நகரம் சென்று வாணிகம் செய்தார்கள். அவர்கள் விடுமுறை