உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

109

அவர்களும் அவனது வேண்டுகோளுக்கு இணங்கி, அவனைத் தம்முடன் காசி மாநகரத்திற்கு அழைத்துக்கொண்டு போய், குட்டிலப் புலவன் வீட்டைக் காட்டிவிட்டுத் தமது இல்லம் சென்றார்கள். மூசிலன், போதிசத்துவரின் வீட்டிற்குள் சென்றான். வீட்டிற்குள் சுவரருகில் அழகான யாழ் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். யாழைக் கையில் எடுத்து வாசித்தான். அதைக்கேட்ட பார்வையற்றிருந்த முதியவர்களான குட்டில னுடைய பெற்றோர்கள்:

66

சூ...சூ...எலி யாழைக் கடிக்கிறது. சூ...சூ..." என்று கூச்சட்டுத்

துரத்தினார்கள்.

அப்போது, மூசிலன் யாழ்க் கருவியை வைத்துவிட்டு அவர்களை வணங்கினான். "நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று அவர்கள் வினவினார்கள்.

“உச்சையினி நகரத்திலிருந்து வந்தேன். இசைப்புலவரின் காலடியில் இருந்து இசை கற்றுக்கொள்ள வந்தேன்” என்று விடை கூறினான்.

“அப்படியா? நல்லது" என்றார்கள்.

66

'இசைப்புலவர் எங்கே?” என்று கேட்டான் மூசிலன்.

அவன் வெளியே போயிருக்கிறான், அப்பா. இப்போது வந்துவிடுவான்” என்றார்கள் பெற்றோர்.

மூசிலன் போதிசத்துவர் வருகிற வரையில் காத்திருந்தான். அவர் வந்தபிறகு அவருடன் நல்ல வார்த்தைகள் பேசி, பிறகு, தான் வந்த காரியத்தைக் கூறினான்.

உடம்பில் காணப்படுகிற குறிகளைக்கொண்டு மனிதரின் குணங்களை அறிந்துகொள்ளும் ஆற்றல் போதிசத்துவருக்கு இருந்தது. இவனுடைய குறிகளைக்கண்டு இவன் நல்லவன் அல்லன் என்பதை அவர் தெரிந்துகொண்டார். ஆகவே, இவனுக்கு இசைக் கலையைக் கற்றுக்கொடுக்க மறுத்தார். “இந்தக்கலை உனக்குத் தகுந்த தல்ல. நீ போய்வா” என்று கூறினார். மூசிலன், போதிசத்துவருடைய பெற்றோரின் பாதங்களைப் பிடித்துக் கொண்டான். “எனக்கு வித்தையைக் கற்றுக்கொடுக்கச் சொல்லுங்கள்” என்று அவர்களை வேண்டிக்கொண்டான். அவர்களும் மனமிரங்கி, அவனுக்கு இசை