உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

66

113

“அஞ்சாதீர்!” என்ற சக்கன் கூறுகிறார்: "நான் உமக்குப் புகலிடமாக வும், பாதுகாவலனாகவும் இருப்பேன். உற்ற வேளையில் உமக்கு உதவி புரிந்து உமது இசைப்புலமையை வெளிப்படுத்து வேன். உமது மாணவனைவிட நீர் புலமை மிக்கவர் என்பது உறுதி. உமது மாணவருக்கு நீர் அஞ்சாதீர்” என்று சொல்லி, மேலும் சக்கன் கூறினார்: யாழை வாசிக்கும்போது அதன் நரம்பு ஒன்றை அறுத்துவிட்டு வாசியும். அதனால் இசை சிறிதும் கெடாது. மூசிலனும் உம்மைப்போல ஒரு நரம்பை அறுத்து வாசிப்பான். ஆனால், அவனுடைய யாழ் இசைக்காது. அவன் தோல்வியடைவான். அப்போது நீர், ஒவ்வொன் றாக ஏழு நரம்பு களையும் அறுத்து வாசியும். உமது யாழ் இனிமையாக இசைக்கும். நரம்புகளை எல்லாம் அறுத்தபிறகு யாழின் சட்டத்தை வாசியும். இன்னிசை உண்டாகிக் காசி மாநகரம் முழுவதும் பன்னிரண்டு யோசனை தூரம் பரவும்” என்று கூறி, மூன்று பகடைக் காய்களை குட்டிலரிடம் கொடுத்து, மேலும் கூறினார்: “உமது யாழ் இசை நகரம் முழுவதும் கேட்கும்போது, இந்தப் பகடையில் ஒன்றை உயரத்தில் வீசி எறியும். முந்நூறு மங்கையர் தேவலோகத்திலிருந்து வந்து உம்மைச் சூழ்ந்து நடனம் ஆடுவர். அப்போது மற்றொரு பகடையையும் உயரஎறிந்தால் மேலும் முந்நூறு மகளிர் வந்து நடனம் புரிவர். பிறகு, மூன்றாம் பகடையையும் எறிந்தால் மற்றும் முந்நூறு மங்கையர் வந்து அரங்கம் முழுவதும் நடனம் புரிவர். அப்போது நானும் அங்கு வருவேன். அஞ்சாமல் வீட்டுக்குப்போம்” என்று கூறினார்.

காலை வேளையில் போதிசத்துவர் வீடு திரும்பி வந்தார். அரண்மனை வாயிலண்டை பெரிய அரங்கம் அமைக்கப்பட்டு, அரசர் பெருமான் அமர்வதற்குச் சிம்மாசனமும் இடப்பட்டிருந்தது. அந்தப் பெரிய அழகான மண்டபத்திற்கு அரசர் வந்து ஆசனத்தில் அமர்ந்தார். அரசரைச் சூழ்ந்து ஆயிரக்கணக்கான ஊழியரும், அழகாக உடுத்திய மங்கையரும், அமைச்சர் முதலிய ஐம்பெருங்குழுவும் இருந்தனர். நகர மக்கள் எல்லோரும் திரண்டுவந்து வரிசை வரிசையாக அமர்ந்தார்கள். போதிசத்துவர் நீராடி, நறு மணம் பூசி, உணவு அருந்தி, கையில் யாழை ஏந்திக்கொண்டு மண்டபத்தில் வந்து தமக்குரிய இடத்தில் அமர்ந்தார். சக்கனும் யாருக்கும் புலப்படாமல் தேவர்கள்சூழ வந்து ஆகாயத்தில் தங்கினான். போதிசத்துவர் மட்டும் சக்கன் வந்திருப்பதை அறிந்தார். மூசிலனும் மண்டபத்திற்கு வந்து தனக்குரிய இடத்தில் அமர்ந்திருந் தான். மண்டபம் முழுவதும் கூட்டம் நிறைந்திருந்தது.