உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

115

சக்கன் தேவலோகம் சென்று தமது அரண்மனையிலே நவ ரத்தினங்கள் இழைத்த சிங்காசனத்திலே அமர்ந்திருந்தார். அப்போது தெய்வ மங்கையர் வந்து, "அரசர் பெருமானே! தாங்கள் எங்குச் சென்றிருந் தீர்கள்?” என்று கேட்டார்கள். சக்கன், தான் சென்றிருந்த இடத்தையும், அங்கு நிகழ்ந்த செய்திகளையும் விளக்கமாகச் சொல்லி, போதிசத்துவரின் குணங்களைப் புகழ்ந்து பேசினான். அதைக்கேட்ட தேவமங்கையர், “ஓ அரசர் பெருமானே! அந்த இசைப்புலவரை நாங்கள் பார்க்கவேண்டும் அவரை இங்கு அழையுங்கள்” என்று வேண்டினர்.

சக்கன், மாதலியை அழைத்தார், "தேவ மங்கையர், இசைப் புலவன் குட்டிலனைக் காண விரும்புகிறார்கள். என்னுடைய தேரைக் கொண்டு போய் அதில் அவரை ஏற்றி அழைத்துக்கொண்டு வா” என்று கட்டளை யிட்டார். தேர்ப்பாகனான மாதலி, போதி சத்துவரை அழைத்துக்கொண்டு வந்தான். சக்கன் அவரை அன்புடன் வரவேற்று, புலவரே! தேவ மங்கையர் உம்முடைய இன்னிசையைக் கேட்க விரும்புகிறார்கள்” என்று தெரிவித்தார்.

66

"தேவர் பெருமானே! இசைவாணராகிய நாங்கள் எங்கள் தொழிலினாலே வாழ்க்கையை நடத்துகிறவர்கள். ஊதியம் பெற்று இசைபாடுவது எங்கள் வழக்கம்” என்று கூறினார் போதிசத்துவர்.

66

'அப்படியே ஆகட்டும், இசையை வாசியுங்கள். பிறகு ஊதியம்

தருவோம்.’

“எனக்கு வேறு ஊதியம் தேவையில்லை. இந்தப் புண்ணிய மான தேவலோகத்தில் வந்து பிறப்பதற்கு இந்தத் தேவகன்னிகைகள் முற் பிறப்பில் என்ன நற்காரியங்களைச் செய்தார்கள் என்பதைச் சொன்னால், அதுவே எனக்குப் போனதுமான ஊதியம் ஆகும்.'

“அந்தக் காரணங்களைப் பிறகு சொல்லுவோம். புலவரே! முதல் உமது இசையை வாசியும்." என்றனர் தேவ கன்னிகையர்.

போதிசத்துவர் ஒருவாரம் வரையில் யாழ் வாசித்துப் பண் இசைத்தார். இவர் இசைத்த பண், தேவலோகத்து இசையைவிட இனிமையாக இருந்தது.

பின்னர், தேவ மங்கையர் தேவலோகத்தில் வந்து பிறப்ப தற்குக் காரணமாயிருந்த அவர்களின் முற்பிறப்புச் செயல்களைச் சொல்லும்