உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

மகனுக்கு ஒன்பது தடவை பொன்னரி மாலைகளை - ஒவ்வொன்றும் நூறாயிரம் பொன் மதிப்புள்ள மாலைகளை அளித்தார். அவை ஒவ்வொன்றையும், அரசகுமரன் தனது செவிலித் தாயாருக்குத் தானமாக வழங்கி விட்டார். சின்னஞ் சிறுவனாக இருந்தபோதே தான தருமஞ் செய்வதற்கு இந்த அரசகுமரன் மிகவும் ஆசையுள்ளவராக இருந்தார்.

வெசந்தர குமாரன் எல்லாக் கலைகளையும் வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தார். அவருக்குப் பதினாறு வயது ஆனபோது, சஞ்சய மன்னன் தன் மகனுக்குத் திருமணம் செய்ய ம் எண்ணித் தன் அரசியாகிய பூவதியுடன் யோசித்தார். யோசித்து மத்தநாட்டரசனான தன் மாமனாரின் பேத்தியாகிய மாதி என்னும் அரசகுமாரியை வெசந்தர குமாரனுக்குத் திருமணம் செய்துவித்துப் பின்னர் அவருக்கு இளவரசுப் பட்டமும் கட்டினார். சிவி நாட்டின் இளவரசனான பிறகு வெசந்தர குமாரன், முன்னை விடப் பன்மடங்கு தான தருமங்களைச் செய்து வந்தார். அவர் நாள்தோறும் ஆறு லட்சம் பொன் தானம் செய்துவந்தார்.

ண்

வெசந்தர இளவரசரின் மனைவி மாதியார் ஒரு ஆண் மகவைப் பெற்றார். அந்தக் குழந்தைக்கு ஜாலி என்று பெயர் சூட்டினர். அக் குழந்தை நடக்கும் வயதடைந்தபோது, மாதியார் ஒரு பெண் குழந்தையை ஈன்றார். இப்பெண் குழந்தைக்குக் கண்ணாஜினா என்று பெயர் சூட்டினார்கள்.

வெசந்தர குமாரன் திங்களுக்கு ஆறுமுறை, தமது புகழ்பெற்ற வெள்ளை யானையின்மேல் அமர்ந்து ஆறு அறச்சாலைகளுக்குஞ் சென்று அறச்செயல்கள் செவ்வனே நடக்கின்றனவா என்பதை நேரே சென்று பார்த்து வருவார். அப்போது கங்க நாட்டில் பெரிய வற்கடம் உண்டாயிற்று. மழை இல்லாமல், நிலபுலங்கள் விளையாமல் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் கொள்ளையும், களவும் செய்யத் தலைப்பட்டனர். பசித்துன்பம் பொறுக்க முடியாமல் கங்க நாட்டு மக்கள் தங்கள் அரசனிடம் சென்று அவரைக் குறை கூறினார்கள். அவர்களின் குறைபாட்டைக் கேட்ட அரசன், “நல்லது, மழையைத் தருவிக்கிறேன், போங்கள்" என்று சொல்லி அனுப்பினார்.

பிறகு மழை பெய்வதற்காக நோன்பு நோற்று, தவம் இருந்து கடவுளை வேண்டினான். அப்பொழுதும் மழை பொழியாமற் போகவே, கலிங்க நாட்டரசன் தனது குடிமக்களை அழைத்துக் கூறினான். “ஏழு