உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

"வள்ளலே! தங்களுடைய குடி ஜனங்கள் உயிர்போலக் கருதி வருகிற உயர்ந்த பொருளை நாங்கள் தானம் கேட்கிறோம். தங்களுடைய வெள்ளை யானையை எங்களுக்குத் தானம் செய் தருள வேண்டுகிறோம்" என்று இரந்து வேண்டினார்கள்.

இதைக்கேட்ட வெசந்தர குமாரன் தமக்குள் யோசித்தான். எனக்குரிய பொருள்கள் எதுவானாலும் நான் கொடுக்க தயங்க மாட்டேன். என் தலையையும் தானமாகக் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறேன். ஆனால், எனக்கு உரியதல்லாத, அரசாங்கத்துக்கே உரியதான கொற்றத்து யானையை இவர்கள் தானம் கேட்கிறார் கள். ஆனாலும், இவர்கள் விரும்பியபடியே இதை இவர்களுக்குத் தானமாக வழங்குவேன்' என்று தமக்குள் எண்ணினார். பிறகு பிராமணர்களிடம், “தானம் ஈவதே என் வழக்கம். இல்லை என்று கூறுவது எனக்கு உகந்த தல்ல. நீங்கள் கேட்கிறபடியே இந்த அருமையான யானையை உங்க ளுக்குத் தானமாகத் தருகிறேன்" என்று கூறி, யானையை விட்டிறங்கி அதன் தும்பிக்கையைப் பிடித்துப் பிராமணர் கையில் கொடுத்தார்.

யானையின் கால்களில் நூறாயிரம் பொன் மதிப்புள்ள பொன் அணிகள் அணியப்பட்டிருந்தன. அதன் முகத்திலும் தந்தங்களிலும் முதுகிலும் பலகோடி பொன் பெறுமானமுள்ள பொன் நகைகளும் வெள்ளி அணிகளும் அணியப்பட்டிருந்தன. யானையின்மேல் இருந்த பொன் அம்பாரி நூறுகோடி பொன் பெறத்தக்கது. இவ்வாறு பெரும் பொருள் மதிப்புள்ள அணி களையணிந்த புகழ் பெற்ற வெள்ளை யானையையும் அதற்கு ஊழியம் செய்யும் யானைப் பாகர், ஏவலாளர் முதலிய ஐந்நூறு ஆட்களையும் அரசகுமரன் பிராமணர்களுக்குத் தானமாக வழங்கினார். அப்போது விண்ணுலகமும் மண்ணுலகமும் அதிர்ந்தது. தேவர்கள் புகழ்ந்து வியந்தார்கள். ஜேதுத்தர நகரம் அதிர்ந்தது.

யானையைத் தானமாகப் பெற்ற பிராமணர்கள் யானையின் மேல் அமர்ந்து யானைப்பாகர் சூழ்ந்துவர, தெற்கு வாயிலிலிருந்து நகரத்தின் நடுவே சென்றார்கள். அவர்களைக் கண்ட நகர மக்கள், “பிராமணர் களே, எங்கள் யானையின்மேல் அமர்ந்து அதை எங்கே கொண்டு போகிறீர்கள்?” என்று வினவினார்கள். வெசந்தர வள்ளல் இந்த யானையை எங்களுக்குத் தானமாக கொடுத்தார். நீங்கள் யார்