உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

இளவரசரின் அரண்மனைக்குப் போய் அவரைக்கண்டு வணங்கி, செய்தியைச் சொன்னான்: "பெருமான்அடிகளே! அடியேனை மன்னித்தருள்க. துன்பமான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன். சிவி நாட்டு மக்கள் – உயர்ந்தவர் தாழ்ந்தவர், செல்வர் வறியவர் முதலிய எல்லோரும் ஒருங்குதிரண்டு வந்து, தங்களை நாடுகடத்தும் படி மன்னர் பெருமானிடம் கூறினார்கள். இன்று இரவு கழிந்து நாளை பொழுது விடிந்தவுடன் ஜனங்கள் வந்து தங்களை, அந்தோ! நாடுகடத்திக் காட்டுக்கு அனுப்பப் போகிறார்கள். மன்னர் பெருமான் இதைத் தங்களுக்கு அறிவிக்கச் சொன்னார்" என்று வருத்தத்தோடு கூறினான்.

"நாட்டு மக்களுக்கு நான் செய்த தீங்கு என்ன? என்னை ஏன் அவர்கள் நாடுகடத்திக் காட்டுக்கு அனுப்ப விரும்புகிறார்கள்?”

66

'தாங்கள் வரையாது வழங்கும் வள்ளலாக இருப்பதுதான், தாங்கள் செய்த குற்றம்.”

"எமது உடம்பின் உறுப்புக்களாகிய கண்ணையும், இரு தயத்தையுங்கூட நான் தானங்கொடுக்க ஆயத்தமாக இருக்கிறேன். அப்படியிருக்க, புறப்பொருளாகிய செல்வங்களை-பொன்னையும் பொருளையும், முத்தையும் மணிகளையும் தானங்கொடுக்கத் தயங்குவேனா? மக்கள் என்னை நாடு கடத்தட்டும். இல்லை; எம்மைத் துண்டுதுண்டாக வெட்டிக்கொல்லட்டும். நாம் தானம் செய்வதில் ருபோதும் பின்வாங்கமாட்டோம். தானம் செய்வதே எமக்கு இன்பகரமான காரியம்” என்று கூறினார் இளவரசர்.

“சிவி நாட்டு மக்களின் எண்ணத்தை அடியேன் தெரிவித் தேன். நாடு கடத்தப்பட்டோர் போகிற, ஆரஞ்சர மலையின் அருகில் ஓடுகிற கொந்திமார ஆற்றண்டை தாங்கள் செல்வது நல்லது” என்று தூதன் கூறினான்.

“நல்லது. அந்த இடத்துக்கே நான் போவேன். அந்த அருமை யான யானையைத் தானங்கொடுத்ததற்காக எம்மை நாடுகடத்த விரும்புகிறார்கள். நாம் நாட்டைவிட்டுப் போவதற்குமுன் எழுநூற்றுத் தானம் செய்ய விரும்புகிறேன், ஆகையால் நாளைப் பகல் முழுவதும் நகரத்தில் இருக்க அனுமதிக்கும்படி மக்களைக் கேட்டுக் கொள்கி றோம். தானம் செய்து முடிந்தவுடன் அடுத்த நாள் காலையில் காட்டுக்குப் போய் விடுகிறோம்” என்று கூறி னார் இளவரசர்.