உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

கூவிக் கொண்டே சென்றான். காட்டைக் காக்கும் வேடனுடைய நாய்கள் இவனை வந்து சூழ்ந்துகொண்டு குரைத்தன. வேடன் இவனைக்கண்டு தனக்குள் எண்ணினான்: ‘இந்தப் பார்ப்பான் வெசந்தரகுமாரனைத் தேடிக் கொண்டு வருகிறான். இவன் நல்ல எண்ணத்தோடு வருகிறவன் அல்லன். மத்தியையோ, அவர்களுடைய மக்களையோ தானமாகப் பெற்றுக்கொண்டு வேலையாளாகக் கொண்டு போக வருகிறான் போலும். இவனை உயிரோடு விடக்கூடாது என்று எண்ணிக்கொண்டு அவன் அருகில் சென்று வில்லை வளைத்து அம்பு ஏற்றி நின்று இவ்வாறு கூறினான்: “உன்னைப்போன்ற பார்ப்பனருக்குக் கொடுத்துக் கொடுத்துக் கடைசியில் வெசந்தர குமாரன் காட்டுக்கு வந்தார். இங்கு அவருடைய மனைவி மக்கள் தவிர வேறு ஒன்றும் அவரிடம் இல்லை. மீன்களைத் தின்ன விரும்பும் கொக்கு ஆற்றைத் தேடிக்கொண்டு போவது போல நீ ஏன் இங்கு வந்தாய்? உன்னை உயிரோடு விடப் போவதில்லை. உன்னைக் கொன்று மார்பைப் பிளந்து இருதயத்தை எடுத்து வயிற்றைக் கீறி ஈரலை எடுத்து, உடம்பில் உள்ள கொழுப்பை யும் எடுத்து யாகம் செய்வதுபோல நெருப்பில் போட்டு ஆகுதி செய்யப் போகிறேன். எங்கள் அரசர் பெருமானின் குடும்பத்தை இன்னும் நாசம் செய்யவா இங்கு வந்தாய்?” என்று சினந்து கூறினான்.

பார்ப்பனன் பயந்து நடுங்கினான். பொய் சொல்லி ஏய்க்க எண்ணங் கொண்டு, “நான் கெட்ட எண்ணத்தோடு இங்கு வரவில்லை. யான் யார் தெரியுமா? நான் இராஜ தூதனாக்கும். நாட்டு மக்களும் அரசர் பெருமானும் அரசியாரும், வெசந்தர குமாரனை அழைத்து வரும்படி என்னை அனுப்பியிருக்கிறார்கள். ஆகையால், இந்த நல்ல செய்தியைச் சொல்ல அவரிடம் போகிறேன். அவர் இருக்கும் இடத்தைச் சொல்லு" என்று சமயத்துக்குத் தக்கவாறு நயமாகப் பொய் பேசினான்.

"

இதைக்கேட்ட வேடன் நாய்களைக் கட்டிவிட்டு, பார்ப்பனனை உட்காரச் செய்து, இதைக் கூறினான்: "தூதரைக் கொல்வது தவறு. நீர் நல்ல எண்ணத்தோடு வந்திருக்கிறீர். இதோ, இந்தத் தேனையும் மான் இறைச்சியையும் அருந்தும்” என்று சொல்லி குடுக்கை நிறையத் தேனை யும், மானின் கால் இறைச்சியையும் உண்ணக் கொடுத்தான். பிறகு, “அதோ தெரிகிறதே கந்தமாதனமலை. அந்த மலையிலே அரசர் பெருமான் தங்கியிருக்கிறார்" என்று கூறி வழியைக் காட்டினான். ஜூஜூகன் சந்தோஷப் பட்டு அவனை வணங்கி, "இந்தா இதோ இந்த இனிப்பு