உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

'வள்ளல் பெருமானே! நான் இப்பொழுதே போகவேண்டும். தாய் வந்தால், பிள்ளைகளைத் தானமாகக் கொடுக்க உடன்பட மாட்டாள். உண்மையிலேயே தாங்கள் தங்கள் மக்களைத் தானம் செய்வதாக இருந்தால், இவர்கள் தாயின் முகத்தைப் பாராமலும், தாய் இவர்களின் முகத்தைப் பாராமலும் இருக்கும்போதே தானம் வழங்கி அருளுங்கள்.'

66

وو

இவர்களின் தாயைப் பார்க்க நீர் விரும்பாவிட்டால், இனிமையாகப் பேசுகிற இவர்களை அழைத்துக்கொண்டு போய் இவர்களின் பாட்டன் இடத்தில் விடும். இவர்களைக் கண்டவுடன் அவர் மகிழ்ச்சியடைந்து உமக்கு வெகுமதிகளை அளிப்பார்.'

“இவர்களின் பாட்டனாரிடம் போனால், அவர் என்னை நன்றாகத் தண்டிப்பார். என்னைக் கொன்றுவிடுவார்.

99

"அவர் நல்லவர். சிவி நாட்டு மக்களும் நல்லவர்கள். இவர் களைக் கண்டவுடன் பாட்டனார் மகிழ்ந்து, உமக்கு விலை யுயர்ந்த பரிசுகள் வழங்குவார். இவர்களை அங்கு அழைத்துக் கொண்டுபோம்.

66

'இல்லை. இச்சிறுவர்களை எனக்கு அடிமைகளாகத் தானம் செய்ய வேண்டுகிறேன். இவர்களை என் மனைவியிடம் கொண்டு போய் அவளுக்கு ஏவல் வேலை செய்யும் ஆட்களாகக் கொடுக்கப் போகிறேன்.

இச்சொற்களைக் கேட்ட சிறுவர்கள் அச்சங்கொண்டு நடுங் கினார்கள். குடிசைக்குப் பின்னால் ஓடி ஒளிந்தார்கள். அங்கேயும் பார்ப்பனன் வந்து பிடித்துக்கொண்டு போய்விடுவான் என்று கருதி, அங்கிருந்து ஓடிப் புதர்களில் ஒளிந்தார்கள். அங்கேயும் வந்து விடுவானோ என்று பயந்து அங்கும் இங்கும் ஓடினார்கள். இவ்வாறு ஓடி ஓடிக் கடைசியில் ஏரியண்டை வந்தார்கள். பிறகு, ஏரியில் இறங்கிக் கழுத்தளவுத் தண்ணீரில் நின்றுகொண்டு தாமரை இலைகளில் முகத்தை மறைத்துக் கொண்டார்கள்.

ஜூஜகன், சிறுவர்கள் அங்கு இல்லாததைக்கண்டு போதி சத்துவரைக் குறை கூறினான்: “ஓ, வள்ளலே! தங்களுடைய கபடம் நன்றாகத் தெரிகிறது. தங்கள் மக்களை ஜேதுத்தர நகரத்திற்கு அழைத்துக்கொண்டு போகமாட்டேன்; வீட்டுக்குக் கொண்டுபோய் அடிமை வேலைக்காக என் மனைவியிடம் விடப்போகிறேன் என்று