உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

அப்படிச் செய்வது தவறு, பிள்ளைகள் என் றாலும் அவர்கள் தானமாக வழங்கப்பட்ட பொருள்கள்தானே! தானமாக வழங்கிய பொருள்களை மீண்டும் பறித்துக்கொள்வது அறம் அல்ல; அப்படிச் செய்வது தகாது என்று கருதி, மக்க ளுக்காக மனம் வருந்தினார்.

காட்டில் ஓட்டிப் போகப்படும் சிறுவர்கள் தமக்குள் சிந்தித்தார் கள்: ‘அப்பாவும் அம்மாவும் எவ்வளவு அன்பாகவும் ஆசையாகவும் இருக்கிறார்கள். இந்தப் பார்ப்பனன் கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் ஆடுமாடுகளை அடிப்பது போல அடிக்கிறானே!' என்று சிந்தித்த வண்ணம் நடந்தார்கள். அப்போது பார்ப்பனன் ஒரு மேட்டிலிருந்து கால் இடறிப் பள்ளத்தில் விழுந்தான். அப்பொழுது சிறுவர்கள் மீண்டும் தமது தந்தை இருந்த இடத்துக்கு ஓடி வந்தார்கள். சிறு பெண் உடல் நடுங்கி அழுதாள். “பார் அப்பா. அடிமைக்குப் பிறந்தவளைப் போலக் கருதி என்னை இவன் அடிக்கிறான். பிராமணர்கள் அன்புள்ளவர்கள் என்று கூறுகிறார்களே! இவன் பிராமண உருவுகொண்ட அரக்கன் போலும். எங்களை இவன் அடிப்பதைப் பார்த்துக் கொண்டும் சும்மா இருக்கிறீர்களே?"

இதற்குள்ளாகப் பள்ளத்தில் விழுந்த பார்ப்பனன் எழுந்து ஓடி வந்து, மறுபடியும் சிறுவர்களைப் பிடித்துக் கைகளைச் சேர்த்துக் கட்டிக் காட்டுவழியே ஓட்டிக்கொண்டு போனான்.

தன் அருமை மகள் கூறியதையும், அவர்கள் படும் துன்பத்தையும் கண்டு, போதிசத்துவர் மனத்தில் பெருந்துன்பம் அடைந்தார். துக்கம் நெஞ்சையடைக்க, அவர் தேம்பித்தேம்பி அழுதார். கண்களிலிருந்து சூடான நீர் வழிந்தது. பிறகு அவர் தமக்குள் சிந்தித்தார்: 'இந்தத் துன்பம் எல்லாம் அன்பு காரணமாக, பற்றுக் காரணமாக ஏற்படுகின்றன. அன்பையும், பற்றையும் நீக்கிப் பொறுமையையும் அமைதியையும் மேற்கொள்ள வேண்டும்' என்று இவ்வாறு எண்ணி அறிவினால் சிந்தித்து மனத் துயரத்தை நீக்கிப் பொறுமையாக இருந்தார்.

போதிசத்துவர் தமது மக்களைத் தானமாக வழங்கியதையும், அவர்கள் அழுதுகொண்டு காட்டு வழியே பார்ப்பனனுடன் போவதை யும் அறிந்த தேவர்கள், தேவலோகத்திலே தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்: "மத்தி, ஆசிரமத்துக்குப் போய் குழந்தைகளைக் காணாமல் அவர்களைப் பற்றி வெசந்தர குமாரனைக் கேட்பாள். அவர்கள் தானமாகக் கொடுக்கப்பட்டதை அறிந்ததும், அவர்களைத்