உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

சூரியன் மறைந்தபிறகு மிருகங்கள் மெல்ல எழுந்து காட்டுக்குள் போய்விட்டன. அதைக்கண்ட மத்தி, ஓடோடியும் ஆசிரமத் துக்கு வந்தாள். அன்று முழு நிலா நாள். வானத்திலே வெண் ணிலா நிலவைப் பரப்பி வெளிச்சந் தந்தது. ஆசிரமத்துக்கு அருகே ஏரிக்கரையண்டை வந்தபோது, ஜாலியும் கண்ணாவும் வழக்கம்போலக் காணப்படவில்லை. நாள்தோறும் அவர்கள் அங்கு வந்து மத்தியைச் சந்திப்பது வழக்கம். "தாய் மானைக் கண்ட மான் குட்டிகள் காதுகளை உயர்த்திக்கொண்டு ஓடி வருவதுபோல, என் குழந்தைகள் சிரித்துக்கொண்டு சந்தோஷ மாக ஓடிவருவார்களே! இன்று அவர்களைக் காணோமே! குருவி, குஞ்சுகளைக் கூட்டிலும், சிங்கம் தன் குட்டிகளைக் குகையிலும் விட்டு விட்டு இரை தேடிக்கொண்டு வருவதைப்போல, நானும் காட்டில் போய் உணவு கொண்டுவருகிறேன். என் குழந்தை களைக் காணோமே! ஜாலியும் கண்ணாவும் ஏரிக்கரையில் மணலைக் குவித்து வீடுகட்டி விளையாடுவார்களே! என்னைக் கண்டதும் ஓடிவந்து இடுப்பைக் கட்டிக்கொண்டும், கழுத்தைக் கட்டிக்கொண்டும் கொஞ்சுவார்களே! அவர்களை இன்று காணோமே! இதோ விழுந்து கிடக்கும் வில்வப் பழம் அவர்கள் விளையாடியதுதான். ஆசிரமம் சந்தடி இல்லாமல் ஓய்ந்திருக்கிறதே! என் குழந்தைகள் இறந்து விட்டார்களோ!' இவ்வாறு தனக்குள் பலவாறு எண்ணிக்கொண்டு மனம் துடிக்க ஓடிவந்தாள்.

வெசந்தர குமாரன் மௌனமாக உட்கார்ந்திருந்தார். அவருக்கு

அருகில் குழந்தைகள் காணப்படவில்லை. பழக்கூடையை

வைத்துவிட்டு இவ்வாறு கேட்டாள்: “குழந்தைகள் எங்கே? ஏன் சந்தடி இல்லாமல் இருக்கிறது? அவர்கள் எங்கே போனார்கள்? வழிதவறிக் காட்டில் போய்விட்டார்களா? துஷ்ட மிருகங்கள் அவர்களைக் கொன்று விட்டனவா? அவர்கள் இறந்துவிட்டார்களா? நான் கண்ட கனவு நனவாய்விட்டதா? அவர்கள் உறங்கு கிறார்களா? விளையாட்டுக்காக ஒளிந்து கொண்டிருக்கிறார்களா? அவர்களைக் காணோமே?'

அப்போதும் போதிசத்துவர் வாய் பேசாமல் மௌனமாக வாளா இருந்தார். மத்தியாருக்கு மேலும் துக்கம் உண்டாயிற்று. "தாங்கள் ஏன் ஒன்றும் பேசாமல் சும்மா இருக்கிறீர்கள்? குழந்தை களைக் காணாமல் இருப்பது அம்புபோல் ஒருபக்கம் மனத்தைத் தைக்கிறது. தாங்கள் மௌனமாக இருப்பது இன்னொரு பக்கம் வாள்போல் அறுக்கிறது. நான் என்ன தவறு செய்தேன்? என்மேல் கோபம் ஏன்? எனக்கு உயிர் போவதுபோல் இருக்கிறது.”