உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 11

-

செய்தார். "நாங்கள் நலமாக இருக்கிறோம். காய்கனிகள் போதுமானவை கிடைக்கின்றன. காட்டு மிருகங்களினால் யாதொரு துன்பமும் இல்லை. நாங்கள் இங்கு வந்து ஏழு திங்கள் ஆகின்றன. இங்கு வந்தவர்களில் தாங்கள் இரண்டாவது பிராமணர். கை கால் கழுவிக்கொண்டு, இந்தப் பழங்களை அருந்துங்கள். குளிர்ந்த நீரைப் பருகுங்கள்” என்று கூறிக் கிழங்குகளையும் கனிகளையும் கொடுத்தார். இவ்வாறு பேசிக்கொண்டிருந்த பிறகு வெசந்தரகுமாரன், பிராமணரைப் பார்த்து, "இந்தப் பெரிய காட்டில், இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்த காரணம் யாதோ?” என்று வினவினார்.

பிராமணன் கூறினான்: “என்றும் வற்றாத ஊருணிபோல, வரையாது வழங்கும் வள்ளலாக இருக்கிறீர். நானோ வயது சென்ற கிழப் பிராமணன். எனக்குப் பணிவிடை செய்ய ஒரு மனைவி வேண்டும். தங்களுடைய மனைவியை எனக்குத் தான மாகக் கொடுப்பீர்களா?

போதிசத்துவர் ஒன்றும் பேசவில்லை. ‘நேற்றுத்தான் என் அருமை குழந்தைகளைத் தானமாகக் கொடுத்தேன். இன்று என் ஆருயிர் மனைவியை மகிழ்ச்சியுடன் தானமாகக் கொடுப்பேன். தானத்தைவிடச் சிறந்த புண்ணியம் என்ன இருக்கிறது? பொன்னையும் பொருளையும் விடச் சிறந்த பொருள் மனைவி. இந்தச் சிறந்த பொருளைத் தானம் செய்வதுதான் உண்மையான தானமாகும்' என்று தமக்குள் சிந்தித்துக்கொண்டு, செம்பைக் கையில் எடுத்துப் பிராமணன் கையில் நீரை வார்த்து மத்தியைத் தானமாக வழங்கினார். அப்போது பூமி அதிர்ந்தது. வானம் நடுங்கிற்று. இடி ஓசை முழங்கிற்று. 'மத்தியை நான் வெறுக்க வில்லை. என் உயிர்போல அவளைக் காதலிக்கிறேன். அப்படிப்பட்ட சிறந்த பொருளைத் தானமாகக் கொடுப்பதுதானே உண்மையான தானம் ஆகும்' என்று எண்ணிக்கொண்டு, மத்தி என்ன நினைக்கிறாள் என்று அறிய அவள் முகத்தை நோக்கினார். மத்தியின் முகம் அமைதியாக இருந்தது. 'இவருக்கு நான் இளமையில் வாழ்க்கைப் பட்டேன். இவர் கருத்துப்படி நடந்துவந்தேன். இப்பொழுதும் இவர் விருப்பப்படியே நடப்பேன்' என்று மத்தி தமக்குள் எண்ணினார்.

அப்போது பிராமணன் கூறினான்: "வெசந்தர வள்ளலே! உம்முடைய மனைவியாரை நான் மறுபடியும் உமக்கே கொடுக் கிறேன். இருவரும் சுகமாக வாழ்ந்திருங்கள். நான் உண்மையில் பிராமணன்