உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

தங்கள் பிள்ளைகள் இடத்தில் அன்பாக இருக்கிறார்களே, தாங்கள் மட்டும் ஏன் தங்கள் பிள்ளையிடம் அன்பு காட்டவில்லை?” என்று

கேட்டான்.

சஞ்சய அரசன், தனது குற்றத்தைப் பேரனிடம் ஒப்புக் கொண்டார். “நாட்டு மக்களின் பேச்சைக்கேட்டு நான் என் மகனுக்குத் தவறு செய்துவிட்டேன். நான் செய்தது பிசகுதான் இப்போது ணர்கிறேன். இந்தச் செல்வங்கள் எல்லாம் யாருக்கு? வெசந்தர குமாரன் வந்து அரசாளட்டும்” என்று சஞ்சய மன்னன் கூறினார்.

"நான் போய் அழைத்தால் அவர் வரமாட்டார். அவரைக் காட்டுக்கு அனுப்பியவர்கள் போய் அழைத்தால் வருவார்” என்றான் ஜாலி.

சஞ்சய மன்னன் அமைச்சர்களையும் குழுவினரையும் அழைத்து, வெசந்தரகுமாரனை நகரத்திற்கு அழைப்பதுபற்றி யோசித்தார். நாட்டின் முக்கியமானவர்களும், அரசர் பெருமானும் யானை சேனைகளுடன் போய்க் காட்டிலிருந்து வெசந்தர குமாரனை அழைத்துவர முடிவு செய்தார்கள். வங்கமலைக் காட்டுக்குப் போவதற்காக அகலமான சாலைகளை அமைக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஜூஜூகப் பார்ப்பான், தான் பெற்ற சுகபோகங்களில் திளைத்து, மட்டுமிதம் இல்லாமல், வயிறு புடைக்க உணவு சாப் பிட்டபடியால், நோய்கொண்டு செத்துப்போனான்.

"

வங்கமலைக் காட்டுக்குப் போக ஜேதுத்தர நகரத்திலிருந்து புதிதாகச் சாலை போடப்பட்டது. வெகுதூரம் பல யோசனை தூரம் உள்ள இந்தச் சாலை, அகலமாக அமைக்கப்பட்டிருந்தது. சிவி அரசன் தமது குடும்பத்துடனும் அமைச்சர், குடிமக்கள் முதலிய பரிவாரங்களுட னும், யானையிலும் தேரிலும் அமர்ந்து புறப்பட்டுச் சென்றார். யானை சேனைகளும் அவர்களுடன் சென்றன. வழியில் இடை இடையே தங்கிப் பலநாள் பிரயாணம் செய்து கடைசியாக முசலித ஏரியண்டை வந்து, பாசறை அமைத்துத் தங்கினார்கள். யானைகளின் பிளிறலும், குதிரைகளின் கனைப்பும், சேனைகளின் கூச்சலும் சந்தடியும், அப்பெரிய ஏரியின் எதிர்கோடியில் இருந்த ஆசிரமத்தில் கேட்டன.

இதன் காரணம் என்னவென்பதை அறிய வெசந்தரகுமாரன் மத்தியுடன் அருகில் இருந்த குன்றின்மேல் ஏறிநின்று பார்த்தார்.