உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

நிலங்களில் வேலை செய்தவர்களும், வாணிகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் தங்கள் தங்களுக்குக் கிடைத்த பொருள்களை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஆட்களும் நகைகளையும் பொருள்களையும் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். இவ்வாறு, அவர்கள் வருவாய் குறைந்து பொருள் நஷ்டமடைந்தார்கள். வயது முதிர்ச்சியினாலே அவர்கள் அலுவல்களைக் கவனிக்க முடியாமற் போயிற்று. தண்ணீர்ப் பானையும் இல்லாத ஏழ்மை நிலையை யடைந்தார்கள். கடைசியில் பிச்சை ஏற்று உயிர் வாழ்ந்தனர்.

பன்னிரண்டு ஆண்டுக்குப் பிறகு ஜேதவன ஆராமத்திருந்து ஒரு பிக்கு, அந்நகரத்துக்கப்பாலிருந்த காட்டுக்கு வந்தார். அங்கு யோகம் செய்துகொண்டிருந்த பிக்குவைக் கண்டார். யோகி, அவரிடம் பகவன் புத்தரைப்பற்றி விசாரித்தார். பிறகு, மற்ற பிக்குகளைப்பற்றி விசாரித்தார். கடைசியில், சாவித்தி நகரத்திருந்த தமது பெற்றோரைப் பற்றி விசாரித்தார். புதிதாக வந்த பிக்கு கூறினார்: "நண்பரே! அவர்களைப்பற்றி என்னைக் கேட்காதீர்.

“ஏன் ஐயா?”

66

'அந்தக் குடும்பத்தில் ஒரு மகன் இருந்தானாம். அவன் துறவுகொண்டு பிக்குவாகப் போய்விட்டானாம். அவன் போய் விட்டபிறகு குடும்பம் நொடிந்துபோய்விட்டது. செல்வம் எல்லாம் போய், வறுமை யடைந்து இப்போது கிழவராகிய தாயும் தந்தையும் பிச்சை எடுத்துக் கொண்டு அலைகிறார்கள்.

وو

இதைக் கேட்டவுடனே யோகியராகிய பிக்கு மனம் வருந்தி வாய்விட்டு அழுதார். “ஏன் ஐயா அழுகிறீர்?" என்று புதிதாக வந்தவர்

கேட்டார்.

"ஐயா, அவர்கள் என்னுடைய தாய் தந்தையர். நான் அவர்களுடைய மகன்.

66

وو

ஐயா, உம்மால் அவர்கள் இந்தத் தாழ்ந்த நிலையை அடைந்தார்கள். நீர் போய் அவர்களைப் போற்றிக் காப்பாற்றும்.

யோகியாராகிய பிக்கு தமக்குள் எண்ணினார்: 'நான் பன்னிரண்டு ஆண்டு யோகம் செய்துவருகிறேன். ஆனால், அதில் சித்தி கிடைக்க வில்லை. நான் போய் இல்லறத்தில் இருந்து என் தாய்