உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

29

இருந்த தலைவனுக்கு ஒரு ஆண் குழந்தையும் அக்கரையில் இருந்த தலைவனுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. ஆண் குழந்தைக்குத் துகூலகன் என்று பெயர் இட்டனர். பெண் குழந்தைக்குப் பாரிகை எனப் பெயர் சூட்டினார்கள். இரண்டு குழந்தைகளும் அழகாக இருந்தன. வேடர் குடியில் பிறந்தும் அக்குழந்தைகள்

பறவைகளையும் விலங்குகளையும் கொல்வது இல்லை.

துகூலகன் பெரியவனாக வளர்ந்து பதினாறு வயதடைந்து ஆண் மகனாக விளங்கினான். அப்போது அவனுடைய பெற் றோர் அவனிடம், “தம்பி! உனக்குத் திருமணம் செய்யப் பெண் பார்க்கப் போகிறோம்” என்று கூறினார்கள். துகூலகன், முற் பிறப்பில் பிரம லோகத்தில் இருந்தவனாகையால், தூய உள்ளம் உடையவனாக இருந்தான். அவன் இல்வாழ்க்கையை விரும்ப வில்லை. ஆகவே அவன், “இல்வாழ்க்கையில் எனக்கு விருப்பம் இல்லை. எனக்குத் திருமணம் வேண்டாம்” என்று கூறினான். பலமுறை அவர்கள் 6 வனுடைய திருமணத்தைப் பற்றி வற் புறுத்தினார்கள். ஒவ்வொரு முறையும் அவன் மணம் வேண்டாம் என்று மறுத்தான். பாரிகையும் வளர்ந்து மணம் செய்யத்தக்க கன்னிப்பெண் ஆனாள். அவளுடைய பெற்றோர் அவளிடம். “நமது நண்பர் மகன் துகூலகன் அழகாக இருக்கிறான். அவனுக்கு உன்னைத் திருமணம் செய்யப்போகிறோம்" என்று சொன்னார்கள். அவளும் முற்பிறப்பிலே பிரமலோகத்தில் இருந்தவளா கையினாலே, அவளுக்கும் இல்வாழ்க்கையில் விருப்பம் இல்லை.

துகூலகன், ஒருவரும் அறியாதபடி பாரிகையிடம் ஆள் அனுப்பி, “நீ மணம் செய்துகொள்ள விரும்பினால், வேறு குடும்பத்திலே யாரை யேனும் மணம் செய்து கொள். நான் மணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கை செலுத்த விரும்பவில்லை” என்று செய்தி தெரிவித்தான். பாரிகையும் அவனுக்கு அவ்வாறே செய்தி சொல்லியனுப்பினாள். இவ்வாறு இவர்களுக்குக் குடும்ப வாழ்க்கையில் விருப்பம் இல்லாமல் இருந்தாலும், இவர்களுடைய பெற்றோர், இவ்விருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்கள். திருமணம் ஆனபிறகும் இவர்கள் இருவரும் பிரமசரிய விரதத்தோடு தூயவாழ்க்கையையே வாழ்ந்து வந்தார்கள்.